“அந்த நேரத்தில் நடிகைகள் அனுபவிக்கும் கொடுமை…” நரகத்திற்கு சமம்.. பிரபல நடிகை கௌதமி உடைத்த ரகசியம்..!

தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கும் கௌதமி வேம்பு நாதன் 2010-ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளி வந்த நகரம், மறுபக்கம் திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவுடன் நகைச்சுவை கதாபாத்திரத்தை செய்து ரசிகர்களின் மத்தியில் ரீச் ஆனவர்.

இதையும் படிங்க: 

தஞ்சாவூரில் பிறந்த இவர் ராஜிவ் பிரசாத் இயக்கிய அகல்யா என்ற தொலைக்காட்சி நாடகத்தில் நடித்ததின் மூலம் ஊடகத்துறையில் அறிமுகமானார். இதனை அடுத்து பட திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

அந்த நேரத்தில் அனுபவிக்கும் கொடுமை..

சின்னத்திரையில் அகல்யா தொடரை அடுத்து ஜீ தமிழில் முரளியுடன் இணைந்து நிறம் மாற பூக்கள் தொடரில் வில்லியாக நடித்து இல்லத்தரசிகளின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் ஸ்ரீ ராமானுஜர், அமர, ஜம்புலிங்கம் 3d, மைனா குஞ்சு, மாலினி 22 பாளையகோட்டை, விந்தை, ஆரம்பமே அட்டகாசம், கலகலப்பு, நகரம் போன்ற படங்களில் இவரது இயல்பான நடிப்பை நீங்கள் பார்த்திருக்கலாம்.


இவர் திரைப்படங்களில் பல்வேறு காமெடி கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர வேடத்திலும் நடித்திருக்கிறார். சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் சமீபத்திய பேட்டியில் கலந்து கொண்டு கூறிய விஷயங்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

நரகத்தை விட மோசமான..

சினிமா துறையை பொறுத்த வரை புதுமுக நடிகைகளை ஆடிசனுக்கு அழைப்பது வாடிக்கை. இந்த ஆடிஷனில் அவருடைய நடிப்பு திறமையை முகபாவணையை பரிசோதனை செய்வதற்காகத் தான் ஆடிஷன் செய்வார்கள்.

இந்த நிகழ்வில் சில முறை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகைகளையும் ஆடிசனுக்கு அழைப்பார்கள். அப்படி பட வாய்ப்புக்காக பல்லை கடித்துக்கொண்டு ஆடிசனுக்கு செல்ல வேண்டி இருக்கும். நடிகைகளுக்கு அது தானே வேலை என்று நீங்கள் கேட்கலாம்.

கௌதமி வேம்பு நாதன் உடைத்த ரகசியம்..

ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள், மேடை நாடகங்கள் என எத்தனையோ பலவற்றில் நடித்து வந்திருக்கிறோம். அந்த நேரத்தில் ஆடிஷன் ஏன் செய்ய வேண்டும்?

உங்கள் நடிப்பை எதற்காக பரிசோதிக்க வேண்டும் என்று சொல்லும் போது ஒரு நரக வேதனை நமக்கு கிடைக்கும். ஆனால் அதையும் தாண்டி அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் அந்த ஆடிஷனில் கலந்து கொண்டு தான் நடிக்க வேண்டும்.

ஒரு வேளை இயக்குனர் எதிர்பார்ப்பது போன்ற நடிப்பை வெளிப்படுத்தாமல் போய்விட்டால் என்ன செய்வது என்று யோசிக்கும் போது அது இன்னும் கொடுமையான விஷயமாக இருக்கும். இதனால் தான் பல்வேறு முன்னணி நடிகைகள் தொடர்ந்து படங்களில் நடிக்காமல் போய்விடுகிறார்கள்.

ஒரு கதாபாத்திரம் இருக்கிறது என்றால் அந்த கதாபாத்திரத்திற்கு அந்த நடிகை பொருத்தமாக இருப்பார் என்று இயக்குனர் நினைத்தால் நேரடியாக அவர்களிடம் கால் சீட்டு வாங்கி படப்பிடிப்பில் கலந்து கொள்ள சொல்லலாம். ஆனால் இதற்கு சரியாக அவர் இருப்பாரா? என்று சந்தேகம் ஏற்படும் போது தான் ஆடிஷனுக்கு அழைக்கிறார்கள்.

அப்படி சந்தேகத்தோடு என்னை அழைத்து நீங்கள் ஆடிசன் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை என்ற கர்வத்தோடு இருப்பதால் நிறைய நடிகைகள் ஆடிசனுக்கு வர மாட்டார்கள். மேலும் அவர்கள் பட வாய்ப்பு வேண்டாம் என மறுத்து விடுவார்கள்.

இதையும் படிங்க: கேரி பேக் ட்ரெஸ்.. இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் ராஷ்மிகா மந்தனா..!

எனவே உண்மையைச் சொல்லப் போனால் அதற்கு நரக வேதனை தான். எவ்வளவோ திரைப்படங்களில் நடித்திருப்போம். இப்போது வந்து நம்மை பரிசோதிக்கிறார்களே என்று தோன்றும் போது சங்கடமான நிலை தான் ஏற்படும்.

அந்த நேரத்தில் நடிகைகள் அனுபவிக்கும் கொடுமை நரக வேதனைக்கு சமமானது என்று நடிகை கௌதமி வேம்பு நாதன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.