“வீட்டில் வெஜிடபிள்ஸ் இல்லையா நோ டென்ஷன்..!” – தக்காளி மோர் குழம்பு செஞ்சு அசத்துங்க..!

 வீட்டில் விதவிதமான சமையல்களை செய்து அசத்தும் இல்லத்தரசிகளுக்கு திடீரென்று ஒரு நாள் வெஜிடபிள்ஸ் இல்லாமல் போனால் என்ன செய்வது என்ற தடுமாற்றம் ஏற்படும். அது மட்டுமல்லாமல் அந்த சமயத்தில் விருந்தாளிகள் எவரேனும் வந்தால் எப்படி சமாளிப்பது என்று நினைத்து யோசிப்பார்கள்.

 அந்த சமயத்தில் நீங்கள் மிகவும் சுலபமாக உங்களிடம் இருக்கும் தக்காளி பழத்தைக் கொண்டு தக்காளி மோர் குழம்பு செய்து அசத்தி விடலாம். மிகவும் சுலபமாக செய்யக்கூடிய எந்த தக்காளி மோர் குழம்புக்கு தேவையான பொருட்கள் என்னென்ன எப்படி செய்யலாம் என்பதை பற்றி இப்போது இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

 தக்காளி மோர் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்

 1 தயிர் ஒரு கப்

2.தேங்காய் எண்ணெய் ஒரு டீஸ்பூன் 3.சின்ன வெங்காயம்

4.தக்காளி இரண்டு

--Advertisement--

5.பச்சை மிளகாய் 3

6.வர மிளகாய் இரண்டு

தாளிக்க

7.கடுகு ஒரு டீஸ்பூன்

8.சீரகம் அரை டீஸ்பூன்

9.ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்

10.உப்பு தேவையான அளவு

11.ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் 12.உளுந்து பருப்பு அரை டீஸ்பூன் 13.கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி

செய்முறை

 முதலில் வெங்காயம் தக்காளி இவற்றை நீங்கள் பொடி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் பச்சை மிளகாயை இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுத்து வைத்திருக்கும் தயிரை கட்டி இல்லாமல் மத்தை கொண்டு கடைந்து வைத்து விடுங்கள்.

 இதனை அடுத்து அடுப்பில் வாணலியை வைத்து சூடானவுடன் தேங்காய் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் தாளிப்பதற்கு வைத்திருக்கும் பொருட்களான கடுகு சீரகம் உளுத்தம் பருப்பை போட்டு பொறித்து அது சிவந்ததும் பெருங்காயம் காய்ந்த மிளகாய் இவற்றை சேர்க்க வேண்டும்.

 இதனை அடுத்து வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பொன் நிறமாக வெங்காயம் வதங்கிய பிறகு நீங்கள் தக்காளியை சேர்த்து மஞ்சத்தூளையும் சேர்த்து வதக்க வேண்டும்.

 இவை நன்கு வதங்கிய உடன் நீங்கள் கடைந்து வைத்திருக்கும் தயிரை இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். தயிரை சேர்த்த பிறகு நீங்கள் கால் டம்ளர் அளவு நீரை ஊற்றி உப்பை சேர்த்து நன்றாக கலக்கி விடவும்.

 இவை நன்றாக கலந்து கொதித்து ஒரு கொதி வரும் சமயத்தில் நுரை ஏற்படும் அதில் நீங்கள் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை தூவி விடவும்.

 இப்போது சூடான சுவையான தக்காளி மோர் குழம்பு தயார் இதனை நீங்கள் சாதத்தோடு உண்ணும் போது டேஸ்ட் வேற லெவலில் இருக்கும். நீங்களும் முயற்சி செய்து இதை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.