குட்டி பத்மினி அருகில் இருக்கும் முன்னணி நடிகை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

பிரபல நடிகை குட்டி பத்மினியுடன் சிரித்தபடி அவருடைய அருகில் அமர்ந்திருக்கும் நடிகை யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் ஒரு சிலர் மட்டுமே அந்த நடிகையை அடையாளம் கண்டறிந்தனர்.

அந்த நடிகை வேறு யாரும் கிடையாது கரகாட்டக்காரன் கனகா தான். இப்போது ஆள் அடையாளம் தெரியாமல் காணப்படும் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சமீபத்தில், நடிகை குட்டி பத்மினி நடிகை கனகாவை நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்தித்திருக்கிறார். அப்போது இருவரும் தங்களுடைய நினைவுகளை பேசி மகிழ்ந்திருக்கின்றனர்.

அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் இந்த புகைப்படம். நடிகை கனகாவின் தாய் தேவிகா நடிகர்கள் எம் ஜி ஆர் சிவாஜி கணேசன் நடித்த பல முன்னணி நடிகர்களுக்கு கதாநாயகியாக 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்.

--Advertisement--

தமிழ் தெலுங்கு மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் கடந்த 1972 ஆம் ஆண்டு நடிகர் தேவதாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பிறந்தவர் தான் நடிகை கனகா.

1973 ஆம் ஆண்டு பிறந்த நடிகை கனகா. கடந்த 1990 ஆம் ஆண்டு தன்னுடைய கணவரை பிரிந்தார் கனகாவின் தாய்.

தொடர்ந்து தன்னுடைய மகள் கனகாவுடன் சென்னையில் வசித்து வந்த இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு மரணமடைந்தார். நடிகை கனகா 1989 ஆம் ஆண்டு ராமராஜனுக்கு ஜோடியாக கரகாட்டக்காரன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கடந்த சில வருடங்களாக திரை துறையில் இருந்து ஒதுங்கி இருக்கும் நடிகை கனகா பல்வேறு உடல் நலப் பிரச்சினைகளுக்கு ஆளாகி இருக்கிறார் என்று தெரிகிறது.

தன்னுடைய தந்தையுடன் ஏற்பட்ட பிரச்சனை.. காதலில் ஏற்பட்ட பிரச்சனை.. சொத்து தகராறு.. என பல்வேறு தனிப்பட்ட பிரச்சனைகளுக்கும் தற்போது உடல்நல பிரச்சனைகளுக்கும் ஆளாகி இருக்கும் இவர் மற்றும் குட்டி பத்மினி இருவரும் நீண்ட நாட்கள் கழித்து ஒரு ஹோட்டலில் சந்தித்து தங்களுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் நடிகை கனகாவா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.