“எவ்வளவு துடிக்கிறார்..” – செந்தில் பாலாஜி கைது குறித்து கஸ்தூரி என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே அதிர வைத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

டாஸ்மாக்கில் முறைகேடு, டாஸ்மாக்கிலேயே போலியான மதுபானங்கள் விற்பனை செய்வது, ஒவ்வொரு மதுபான பாட்டிலுக்கும் பத்து ரூபாய் அதிகமாக பணம் வாங்கிக் கொள்வது, மின்சார துறை அமைச்சராக இருக்கும் இவர் பிரபல காற்றாலை மின்சார உற்பத்தி நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுப்பதற்காகக பல்வேறு வழிகளில் சட்டவிரோதமான முறையில் பணம் பரிமாற்றத்தில் ஈடுபட்டது.

போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது அரசு பணி வாங்கித் தருவதாக கூறி கிட்டத்தட்ட பல்வேறு நபரிடம் 1.62 கோடி ரூபாய் லஞ்சும் பெற்றது போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு கடந்த சில வாரங்களாக செந்தில் பாலாஜியை சுற்றி அமலாக துறை மற்றும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

--Advertisement--

சோதனையின் முடிவாக கிடைத்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு செந்தில் பாலாஜியை நள்ளிரவு 2 மணி அளவில் கைது செய்திருக்கின்றனர். இது தமிழக முழுதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த கைது குறித்து பல்வேறு அரசியல் பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக திமுக அமைச்சர்கள் மற்றும் திமுகவினர் இந்த கைதுக்கு எதிராக தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க அவ்வப்போது சமூகம் சார்ந்த விஷயங்களில் குரல் கொடுத்து வரும் நடிகை கஸ்தூரி தற்போது செந்தில் பாலாஜியின் கைது குறித்து தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார்.

செந்தில் பாலாஜியை கைது செய்த பொழுது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் இதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் உடன் இருந்தவர்கள் கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் செந்தில் பாலாஜி அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் காவல்துறையினர். மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் செந்தில் பாலாஜிக்கு மருத்துவம் பார்த்து வருகிறார்கள் மருத்துவர்கள் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

இதனை தொடர்ந்து கஸ்தூரி கூறியுள்ளதாவது, செந்தில் பாலாஜி எவ்வளவு துடிக்கிறார். ரெய்டு போகும் போது அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகளோடு மருத்துவர்களும் அவசியம் இருக்க வேண்டும்.

இந்திய அரசியல்வாதிகள் வலு இல்லாத இதயங்களை கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு சிறைச்சாலையும் இதயத்திற்கான சிறப்பு சிகிச்சை அமைப்பை கொண்டிருக்க வேண்டும்.

காவலர்கள் இதயம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். போலீஸ் ஜீப்புக்கு பதிலாக ஆம்புலன்ஸை பயன்படுத்துங்கள் என செந்தில் பாலாஜி நெஞ்சு வழியில் துடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த ஒட்டுமொத்த சம்பவத்தையும் பகடி செய்யும் விதமாக தன்னுடைய கருத்தை பதிவிட்டு இருக்கிறார்.

இதனை தொடர்ந்து நடிகை கஸ்தூரிக்கு ஆதரவாகவும் அவரை எதிர்த்தும் பல்வேறு இணையவாசிகள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.