என் குடும்பத்துக்கு எதாவது ஒண்ணுன்னா அதுக்கு மம்தா தான் காரணம்… காங்கிரஸ் தலைவர் புகார்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி சமீபத்தில் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் தலைவர் கவுஸ்டாவ் பாக்சி, தற்போது தனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மாநில உள்துறைச் செயலர் மற்றும் காவல்துறை ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேற்கு வங்க காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் இவர் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் சொல்லியிருக்கிறார். மேலும் அவரை சமூக ரீதியாக புறக்கணிப்பதற்காக அவரது வீடு  மற்றும் பராக்பூரில் பல இடங்களில் பல சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதாகவும்  கூறப்படுகிறது.

அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது “TMC நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடமிருந்து சில ரகசிய மற்றும் நம்பகமான ஆதாரங்கள் மூலம், என் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பதை நான் அறிந்தேன். எனவே, எனது உள்ளூர் போலீஸ் கமிஷனர் மற்றும் யூனியன் உள்துறை செயலாளருக்கு மெயில் அனுப்பி விஷயத்தை அவர்களிடம் தெரிவித்தேன்.

எனது வயதான பெற்றோர் மற்றும் எனது குடும்ப உறுப்பினர்களைப் பற்றி நான் கவலைப்படுவதால் போதுமான பாதுகாப்பை வழங்குமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டேன்”  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எனக்கு பயம் இல்லை

“என் அகராதியில் பயம் என்ற வார்த்தை இல்லை. ஆனால் எனது குடும்ப உறுப்பினர்களைப் பற்றி நான் கவலைப்படுகிறேன். என் குடும்பத்திற்கு ஏதேனும் நேர்ந்தால், அவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் டிஎம்சி தலைவர் அபிஷேக் பானர்ஜி மட்டுமே பொறுப்பு.

--Advertisement--

எனவே இதற்கு தயாராக இருங்கள். எனக்கு ஏதாவது நேர்ந்தால், அதன்பிறகு ஏற்படும் அதிர்ச்சியை அவர்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாது,” என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார். இதுபோல பல முக்கிய அரசியல் செய்திகளை உடனுக்குடன் படிக்க நம்ம தமிழகம் இணையதள பக்கத்தை தொடர்ந்து படியுங்கள்.