” 2 K kids மறந்து போன சீனி புளிங்கா @ கொடுக்காபுளி ..!” – என்னென்ன நன்மைகள் தெரியுமா?

 90 கிட்ஸ் விரும்பி சாப்பிட்ட சீனி புளிங்கா  தற்போது இருக்கும் இடம் தெரியாமல் பிள்ளைகளுக்கு கிடைக்காமல் போனது என்ற வருத்தம் உங்களுக்கு என்றாவது ஏற்பட்டு இருக்கிறதா?

நீங்கள் விளையாடிக் கொண்டே தின்ற அந்த கொடுக்காப்புளியில் இவ்வளவு சத்துக்கள் இருப்பதால் நம் தலைமுறைக்கு பின் வந்த 2கே தலைமுறைக்கு இந்த நன்மைகள் அனைத்தும் போய் சேரவில்லை.

அட அப்படி அந்த கொடுக்காப்புளியில் என்னென்ன சத்துக்கள் உள்ளது என்பதை இந்த கட்டுரையில் நீங்கள் படித்து தெரிந்து கொண்ட பிறகாவது உங்கள் பிள்ளைகளுக்கு அதை குறுந்தினியாக கொடுக்க பழகலாமே.

சீனி புளிங்கா @  கொடுக்காப்புளியில்  கிடைக்கும் நன்மைகள்

👍மரமாக வளர்ந்து பல நன்மைகளைக் கொடுக்கும் இந்த கொடுக்காப்புளியில் பூக்கள், விதைகள், பட்டைகள்  மருத்துவ குணம் நிறைந்தது.

👍இந்த கொடுக்காப்புளியில் நார்ச்சத்து, வைட்டமின் சி,சபோனின்  போன்றவை பருத்த குழந்தைகளின் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. மேலும் இதை பெரியவர்கள் உட்கொள்வதின் மூலம் அவர்களுக்கு அதிகப்படியாக இருக்கக்கூடிய கொழுப்புகளை குறைத்து உடல் எடை பராமரிப்பில் மிகுந்த சிறப்போடு செயல்படுவதால் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதனை அவர்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

--Advertisement--

 👍ஏழை, பணக்காரன், கிராமம், நகரம் என்ற வித்தியாசம் இல்லாமல் இன்று புற்றுநோய் பல்கி பெருகி வருகிறது. இந்தப் புற்று நோய்க்கு இந்த மரத்தின் இலைகள் சக்தி வாய்ந்த புற்று நோயை தடுக்கக்கூடிய ஆற்றல் மிக்கதாக திகழ்கிறது.

👍 இதில் இருக்கும் தயமின் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்த உதவுவதால் இந்த கொடிக்கா புளி பழத்தையோ அல்லது இலையை கஷாயமாக வைத்து குடிப்பதன் மூலம் புற்றுநோய் தாக்குதலில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ள முடியும்.

👍 இந்த சீனி புளியங்கா அதிகளவு ஆன்டி-ஆக்சைடுகளை கொண்டிருப்பதால் இது உங்கள் உடலில் ஏற்படும் அமிலத்தை அகற்ற உதவி செய்கிறது. இதன் மூலம் இரைப்பையில் அமிலம் சுரப்பு தடுக்கப்பட்டு அல்சர் நோய் ஏற்படுவதை தடுக்கிறது.

 👍கால்சிய சத்து எலும்புகளின் உறுதிக்கு மிகவும் முக்கியமானது. அது மட்டுமல்லாமல் தசைகளில் மேம்பாட்டை அதிகரிக்க கூடிய இந்த கால்சிய சத்து இதில் அதிக அளவு உள்ளதால் தசைகளில் ஏற்படும் வலி தசை இறுக்கத்தை குறைக்க இதன் காய் மற்றும் இலைகள் உதவி செய்கிறது.

👍 கல்லீரல்களில் ஏற்படுகின்ற நச்சுக்களை வெளியேற்றி உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை தக்கபடி ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய ஆற்றல் இந்த கொடுக்காப்புளியில் உள்ள வேதிப்பொருட்களுக்கு உள்ளதால் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இது உதவி செய்கிறது.

👍மேலும் கொடுக்காப்புலியில் இருக்கின்ற பிளாவனாய்டுகள், டானின்கள், வைட்டமின் சி போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்கிறது. இதன்மூலம் தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள இதனை உணவில் சேர்ப்பது அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 👍சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி தருகின்ற அற்புதமான வேலையை இது செய்கிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க இது உதவி செய்வதால் சர்க்கரை நோயாளிகளும் தாராளமாக இந்த பழத்தை உண்ணலாம்.

 இத்துணை அற்புதமான நன்மைகளைக் கொண்டிருக்கும் கொடிக்காப் புளியை இன்று இருக்கும் தலைமுறை சாப்பிட்டார்களா என்று கூட தெரியாது. அவர்களுக்கு இந்த நன்மை கிடைக்க வேண்டும் என்றால் நமது பாரம்பரிய பழங்களைக் கொடுக்க பழக்கப்படுத்துங்கள் அதன் மூலம் எண்ணற்ற நன்மைகளை பெற முடியும்.