குட் நைட் பட ஹீரோயினுக்கு திடீர் கல்யாணம்..! மாப்பிள்ளை இவரு தான்..!

குட் நைட் பட ஹீரோயினுக்கு திடீர் கல்யாணம்..! மாப்பிள்ளை இவரு தான்..!

சில நடிகைகள் ஓரிரு படங்களில் நடித்தாலே, ரசிகர்கள் மனதை கவர்ந்து விடுகின்றனர். அந்த வகையில் மீதா ரகுநாத் முக்கியமான ஒருவர். மிக எளிமையான நடிகையாகவும், அதே நேரத்தில் தரமான நடிகையாகவும் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மீதா ரகுநாத்

முதல் நீ, முடிவும் நீ என்ற படத்திலும், அடுத்து மணிகண்டனுடன் குட்நைட் என்ற படத்திலும் நடித்தவர் மீதா ரகுநாத். இன்னும் நிறைய படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், திடீரென குடும்ப வாழ்க்கைக்கு தயாராகி விட்டார் என, சில மாதங்களுக்கு முன் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள் சொல்லியது.

ஊட்டியை சேர்ந்த மீதா ரகுநாத், முதல் நீ முடிவு நீ படத்தில் நடிக்க, 3 ஆயிரம் கலந்துக்கொண்ட ஆடிஷனில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். பள்ளி செல்லும் மாணவியாக, கல்லூரி முடித்த இளம் பெண்ணாக இரண்டு கேரக்டரில் மிக அற்புதமான வேறுபட்ட நடிப்பை வழங்கினார்.

குட்நைட் படத்தில்…

முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மீதா ரகுநாத், அடுத்து மணிகண்டனுடன் குட்நைட் படத்தில் நடித்தார். இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படத்தில் ஆதரவற்ற இளம் பெண்ணாக, கணவரது குறட்டை பிரச்னையுடன் வாழும் பெண்ணாக மிக சிறந்த அழுத்தமான நடிப்பை தந்திருந்தார்.

இதையும் படியுங்கள்: 3 காதல்,.. 2 திருமணம் செய்த VJ மகாலட்சுமி குறித்து பலரும் அறியாத ரகசியங்கள்..!

இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், கடந்தாண்டு நவம்பர் மாதம் அவரது திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியானது. இதனால் ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைந்தனர்.

ஏனெனில் குட்நைட் படத்தில் மிக யதார்ததமான ஒரு மனைவியாக அவர் நடித்திருந்ததை பார்த்து, அவரது ஒரு மானசீக காதலியாகவே பல இளைஞர்கள் மனசுக்குள் காதலிக்க துவங்கி விட்டனர்.

திருமணம்

தற்போது மீதா ரகுநாத்துக்கு திருமணம் நடந்து முடிந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. தனது திருமண புகைப்படங்களை, தனது கணவருடன் இருக்கும் காட்சிகள் கொண்ட புகைப்படங்களை, நடிகை மீதா ரகுநாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

இதில் இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் நடந்து முடிந்திருப்பதும் பல ஆண்டுகளாகவே நண்பர் என்ற நிலையில், சில ஆண்டுகளாக அவரை காதலித்து வந்த மீதா ரகுநாத், இப்போது தனது நண்பரையே திருமணம் செய்திருப்பதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது.

மாப்பிள்ளை இவர்தானா

குட்நைட் பட ஹீரோயின் மீதா ரகுநாத்துக்கு திடீர் திருமணம் நடந்தது, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது. மாப்பிள்ளை இவர்தானா, என அவர் வெளியிட்ட புகைப்படங்களை ஆர்வமாக பார்த்து, ஷேர் செய்து வருகின்றனர்.

முற்றுப்புள்ளி வைத்துவிடுவாரா

அதே வேளையில் திருமணத்துக்கு பிறகும் மீதா ரகுநாத் நடிப்பாரா, அல்லது இரண்டு படங்களுடன் முற்றுப்புள்ளி வைத்துவிடுவாரா என்பதும் ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.