யாரு திருடன்..? – தீயாய் பரவும் பருத்திவீரன் சென்சார் சான்றிதழ்..! – அம்பலமான அயோக்கியத்தனம்..!

சமீபத்தில் இயக்குனர் அமீர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையே உருவான பிரச்சனை உச்சகட்டம் அடைந்துள்ளது. இதற்கு காரணம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அமீர் குறித்து மோசமான கருத்துக்களை அவருடைய புகழுக்கும் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக திருடன் என்று கூறியிருந்தார்.

தயாரிப்பு செலவு என பொய் கணக்கு கூறி என்னிடம் நிறைய பணம் பறிக்க முயற்சி செய்தார் என கூறியிருந்தார் ஞானவேல் ராஜா.. இதனை தொடர்ந்து இயக்குனர்கள் சசிகுமார், சமுத்திரகனி, கரு பழனியப்பன், பாரதிராஜா உட்பட பலரும் அமீருக்கு ஆதரவாக தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தனர்.

மேலும் பருத்திவீரன் படத்தில் நடந்தது என்ன..? என்று தங்களுக்கு தெரிந்த உண்மைகளை கூறியிருந்தனர். இதனால் அதிர்ந்து போன ஞானவேல் ராஜா அமீரிடம் வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து மீண்டும் சமுத்திரகனி, சசிகுமா,ர் ஆகியோர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக புதிய அறிக்கையை வெளியிட்டனர். ஞானவேல் ராஜா மீது சுமத்திய பொய் குற்றச்சாட்டுகள் என்ன நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தி இருந்தால் என்று சொல்கிறார் ஞானவேல் ராஜா.

அப்படியெனில், அந்த சில வார்த்தைகள் என்ன..? திட்டமிட்டே ஒருவரை அவமானப்படுத்திவிட்டு.. அவருக்கு அவரே வருந்துவது.. என்ன மாதிரியான வருத்தம். இதன் மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல் ராஜா சொல்ல வருவது என்ன..?

--Advertisement--

பெயரிடப்படாத அந்த கடிதம் யாருக்கு..? எனக்கு கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் இயக்குனர் கரு பழனியப்பன் நேர்காணல் ஒன்றில் பேசினார், அதில் எனக்கு பருத்திவீரன் படத்தில் நடந்தது எதுவும் தெரியாது.

ஆனால், ஞானவேல் ராஜா தன் பேட்டியில் திமிரான உடல்மொழியுடன் அமீரை திருடன் என்று கூறினார். ஒரு வெற்றி படத்தை கொடுத்த இயக்குனரை இப்படித்தான் பேசுவார்களா..? தமிழ் சினிமாவில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு பராசக்தி அமைந்தது போல நடிகர் கார்த்திக்கு பருத்திவீரன் அமைந்தது.

இப்படி ஒரு படம் எந்த அறிமுக நடிகருக்கும் கிடைத்தது கிடையாது. கிடைக்கப் போவதும் கிடையாது. கார்த்தி பத்து படத்தில் நடித்து அடையும் புகழை ஒரே படத்தில் கொண்டு சேர்த்தவர் அமீர்.

கார்த்தி ஒவ்வொரு மேடையிலும் என் அண்ணன் அமீர் என்கிறார். ஆனால், அண்ணனைத் தான் ஆள் விட்டு திருடன் என கூறுகிறார் என்று கடுமையாக விளாசி இருந்தார்.

இது ஒரு பக்கம் இருக்க தற்போது பருத்திவீரன் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியாகி இருக்கிறது.

அதில் ஸ்டூடியோ கிரீன் பெயரோ அல்லது ஞானவேல் ராஜா-வின் பெயரோ இல்லவே இல்லை. படத்தை தயாரித்து சென்சாருக்கு அனுப்பியது இயக்குனர் அமீர் தான் என்பது தெரிய வந்திருக்கிறது.

இது ஞானவேல் ராஜாவின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்தும் விதமாக இருக்கிறது என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.