பாஜகவின் மாநில பொறுப்பில் சவுக்கு சங்கரா !தீயாய் பரவும் செய்தி

தமிழக பாஜக வில் இருந்து மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களில் தலைவர் சிபிஆர் நிர்மல் குமார் மற்றும் பாஜகவின் மாநில செயலாளர் ஜோதி ஆகிய முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து அதிமுகவில் இணைந்ததை அடுத்து  தற்பொழுது அண்ணாமலை மும்மரமாக இறங்கியுள்ளார்.

தற்போது டெல்லி வரை இச்சம்பவம் சென்றுள்ளதால் இது குறித்து ஆலோசிக்க பாஜகவின் முக்கிய தலைவர்கள் சென்னைக்கு வருவதாகவும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது இந்த நிலையில் கட்சியை விட்டு சென்றவர்களின் காலி இடத்தை நிரப்ப தற்பொழுது பெரும் போட்டி நிலவி வருகிறது.

அதனால்  பாஜக கட்சிக்கு விசுவாசமான ஆட்களின் பட்டியலை தற்பொழுது அண்ணாமலை தீவிரமாக தயாரித்து வருகிறார். மேலும் தன் மீது அதிருப்தியில் உள்ளவர்களையும் அடையாளம் கண்டு கட்சியிலிருந்து விலகுவதை தடுக்கும் முயற்சிகளிலும்ம் ஈடுபட்டுள்ளாராம். இதே நேரத்தில் காலியாக உள்ள ஐடி பின் பதவிக்கு சவுக்கு சங்கர் அண்ணாமலை தேர்வு செய்கிறார் என்று ஒரு செய்தி வெளியாகியது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அதில் கூறப்பட்டிருப்பதாவது

இந்த அறிக்கையை சவுக்கு சங்கரி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது தமிழக பாஜக தொண்டர்கள் அனைவரும் மாநில தலைமையின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த சில தினங்களாக தமிழக பாஜகவில் நிகழும் மாற்றங்களை பொறுத்துக் கொள்ளவேண்டும்.

நான் எங்கோ ஒரு கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தேன் பாஜகதான் என்கின்ற கட்சியின் அமரவைத்து இந்தக் கட்சியின் கொள்கைகளை கோட்பாடுகளை எனக்கு தெரியாது. அதை தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை என கருதுகிறேன் கட்சியிலிருந்து வெளியேற விரும்பும் நபர்கள் தாராளமாக வெளியேறி கொள்ளுங்கள். ஏற்கனவே வெளியேறியவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க.

--Advertisement--

பதவியில் இருந்து வெளியேறிய நபர்கள் இடத்திற்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்க வேண்டிய நிர்வாகத்தில் கட்சி உள்ளது. அதன்படி தமிழக பாஜக தலைவர் அனைவரும் அறிந்த முகமான பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் மற்றும் மாநில செயலாளராக பிரதீப் ஆகியோர் நியமிக்கப் படுகின்றனர் என்பதை இந்த அறிக்கை வாயிலாக தலைமை தெரிவித்துக் கொள்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அது திமுக ஐடி விங் மூலம் பரப்பப்படும் போலி அறிக்கை என்று தற்பொழுது சவுக்கு சங்கர் பேட்டியில் கூறியுள்ளார். மேலும் அந்த ட்வீட்டில் திமுகவிற்கு நக்கலாக நன்றியையும் தெரிவித்து உள்ளார். மேற்கண்ட இந்த ட்வீட்டை சவுக்கு சங்கர் தற்போது வெளியிட்டுள்ளார் இதை பார்க்கும்போது இந்த தகவல் போலி  செய்தியாக அறியப்படுகிறது