என்னது பாடகர் மனோவின் மனைவி இந்த பிரபலமா..? தீயாய் பரவும் போட்டோ..

என்னது பாடகர் மனோவின் மனைவி இந்த பிரபலமா..? தீயாய் பரவும் போட்டோ..

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான முன்னணி பாடகர்களில் மிக முக்கியமான ஒருவராக இருப்பவர் பாடகர் மனோ. இவர் கடந்த 1980களின் பிற்பகுதிகளில் திரைப்படங்களில் பாட ஆரம்பித்தார்.

பாடகர் மனோ

இதுவரை பாடகர் மனோ 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசை கச்சேரிகளை நடத்தியிருக்கிறார். இதுதவி ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்களுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஸ்பி பாலசுப்ரமணியம், கேஜே ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன் வரிசையில் மிக முக்கியமான பாடகராக இருந்தவர், இப்போதும் இருப்பவர் மனோதான். மனோ பாடிய சூப்பர் ஹிட் பாடல்கள் என்றென்றும் மறக்க முடியாதவை.

மதுர மரிக்கொழுந்து வாசம்

உதாரணமாக செண்பகமே, செண்பகமே, மதுர மரிக்கொழுந்து வாசம், அதோ மேக ஊர்வலம், என்கிட்ட மோதாதே, வா வா வா கண்ணா வா, தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே என மனோ பாடிய பல பாடல்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

--Advertisement--

தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் மனோ பாடியிருக்கிறார். இவரது இயற்பெயர் நாகூர் பாபு. இளையராஜா அவரது பெயரை மனோ என மாற்றினார்.

இதையும் படியுங்கள்:  போதையில் தங்கை கணவருடன் வரம்பு மீறிய ஸ்வீட் நடிகை.. அட கொடுமைய..

சிங்கார வேலன்

தெலுங்கில் 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மனோ, தமிழில் சிங்காரவேலன் படத்தில், நடிகர் கமல் நண்பராக நடித்திருந்தார். இதில் கவுண்டமணி, சார்லி, வடிவேலு உடன் நடித்திருந்தனர்.

மனோ பாடிய பாடல்களில் காதலன் படத்தில் முக்காலா முக்காப்புலா, உள்ளத்தை அள்ளித்தா படத்தில் அழகிய லைலா அது இவளது ஸ்டைலா, முத்து படத்தில் தில்லானா தில்லானா போன்ற பாடல்கள் மிகவும் வைப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் சிங்கர்

இப்போது விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சியில் பாடகர் மனோ கலந்து இருக்கிறார்.

சில சீசன்களில் அவர் பங்கேற்காத நிலையில் இந்த சீசனில் அவர் பங்கேற்று இருப்பதால், அவரை கௌரவிக்கும் விதமான இந்த வாரம் ராக் ஸ்டார் மனோ என்ற தலைப்பில் போட்டியாளர்கள் அவர் பாடிய பாடல்களை பாடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:  GOAT அப்டேட் கேட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய ரசிகர்… வெங்கட்பிரபு கொடுத்த செருப்படி பதில்..

மனைவி கமீலா

இந்த நிலையில் சர்ப்ரைஸ் கெஸ்ட் ஆக இந்த நிகழ்ச்சியில், பாடகர் மனோவின் மனைவி கமீலா பங்கேற்றார். மனைவியை பார்த்து சந்தோஷப்பட்ட மனோ, மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று கூறி அவரை பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

கடந்த 1985ம் ஆண்டில் மனோ – கமீலா திருமணம் நடந்தது. ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். இப்படி தன் மனைவியுடன் பாடகர் மனோ டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றது இதுதான் முதல்முறை என பலரும் கூறுகின்றனர்.

பாடகர் மனோ, தன் மனைவி கமீலாவுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.