ராஜஸ்தானில் கைது செய்யபட்ட தமிழக காவல்துறை அதிகாரிகள் !

ராஜஸ்தானில் குற்றவாளிகளைத் தேடி சென்ற திருச்சி காவல்துறையைச் சேர்ந்த 12 பேர் லஞ்சப் புகாரின் பேரில் ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்புப் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சியில் திருட்டு வழக்கு தொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த சோனியா என்ற பெண் மற்றும் அவரது கணவர் பன்னாலால் ஆகியோரை திருச்சி போலீசார் தேடி வந்தனர். திருச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் 12 பேர் கொண்ட போலீசார் ராஜஸ்தான் சென்று அஜ்மீர் பகுதியில் தீவிர சோதனை நடத்தி வந்தனர்.

ஆனால், தமிழக சிறப்புப் படை போலீஸாருக்கு எதிராக ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்புத் துறையில் அந்த  தம்பதியினர் புகார் அளித்துள்ளனர். திருட்டு வழக்கில் தங்களை சிக்க வைக்காமல் இருக்க தமிழக போலீசார் ₹25 லட்சம் லஞ்சம் கேட்பதாக தம்பதியினர் தங்கள் புகாரில் கூறியுள்ளனர்தம்பதிகள் கொடுத்த லஞ்சப் புகாரின் பேரில் ராஜஸ்தான் மாநிலம் பினாய் காவல் நிலைய எல்லைப் பகுதியில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த 12 சிறப்புப் படை காவலர்களை ராஜஸ்தான் போலீஸார் கைது செய்தனர்.

தம்பதிகளிடம் லஞ்சம் வாங்கும் போது தமிழக போலீசார் கையும் களவுமாக பிடிபட்டதாகவும், ராஜஸ்தான் போலீசாருடன் தமிழக போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ராஜஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், இது பொய்யான புகார் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபுவின் தலையீட்டின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக போலீஸார் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

--Advertisement--