Kerala Story Ban
Kerala Story Ban

கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிர்ப்பு வலுக்க காரணம் என்னன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தை சுடூப்டோ சென் (Sudipto Sen) இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது இந்தப் படத்தில் அடா ஷர்மா சித்தி இதானி யோகிதா பினானி சோனியா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளிவந்து மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளானது. இதற்கு காரணம் இந்த படத்தை தமிழ்நாட்டில் வெளியிடக் கூடாது என்ற கடும் எதிர்ப்பு இப்போது வழுத்து வருகிறது.

kerala story
kerala story

இதற்கு காரணம் இந்த படத்தின் கதை அம்சம் தான். இந்த படத்தில் கேரள பெண்களை தீவிரவாதிகள் எனவும் தீவிரவாதத்தில் ஈடுபடக்கூடிய பெண்களாக சித்தரித்து காட்டி இருப்பதால் இந்த படத்தை தடை செய்யக்கோரி பல குரல்கள் எழுந்துள்ளது.

மேலும் கேரளாவில் இருக்கும் பெண்கள் மதம் மாறி இந்த தீவிரவாதத்தில் ஈடுபடுவதாக கதையில் சொல்லப்பட்டு இருக்கக்கூடிய விதத்தைப் பார்த்து கேரளா முழுவதும் இந்த படத்திற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.

எனவே, இந்த எதிர்ப்புக்கெல்லாம் கவலைப்படாமல் வரும் மே மாதம் ஐந்தாம் தேதி வெளியாக உள்ள எந்த திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட வேண்டாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

--Advertisement--

kerala story
kerala story

இந்த எச்சரிக்கையை மீறி தமிழகத்தில் எந்த படத்தை வெளியிட்டால். மதம் சார்ந்த பிரச்சனைகள் வெடிக்கலாம் என்று கூறப்பட்டுகிறது. உளவுத்துறையின் எச்சரிக்கையை மதித்து செயல்பட்டால் தமிழகத்திற்கு நல்லது என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த படத்தை உண்மை கதை என்று கூறிவருகிறார் படத்தின் இயக்குனர். இது போன்று நிகழ்வுகள் அங்கு நடக்கிறதா..? என்பது தெரியாத நிலையில் இந்த படம் அங்கு வெளிவருமா..? என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

kerala story
kerala story

இதனை அடுத்து இந்த படத்தை அண்டை மாநிலமான கேரளா போல இங்கே வெளியிட்டாலும் பிரச்சனைகள் வெடிக்கும் என்பது தெரியவந்துள்ள நிலையில் வரும் மே ஐந்தாம் தேதி இந்த படம் வெளிவருமா..? என்பதை பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியவரும்.

எனவே சர்ச்சைக்குரிய இந்த படத்தை வெளியிடுவதால் பிரச்சனைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொண்ட அரசு இந்த படத்தை வெளியிட தடை செய்வதே மிகவும் சிறப்பாக இருக்கும் என பொதுமக்களின் கருத்தாக உள்ளது. அதே சமயம், இந்த படத்திற்கு தடை விதிக்கும் பட்சத்தில் இதே போல வேறு எந்த மதம் அல்லது சமூகத்தை சீண்டும் விதமாக படம் எடுத்தாலும் அதையும் சேர்த்தே தடை செய்ய வேண்டும்.

அப்போது தான் சமுகநீதி என்ற பெயரில் சாதி,மதம் சார்ந்த விஷயங்களை சீண்டும் விதமாக படங்களை எடுத்து குறிப்பிட்ட இரண்டு மதத்தினர் அல்லது சமூகத்தினர் இடையே சிண்டு முடிந்துவிட்டு கோடி கோடியாக பணத்தில் குளிக்கும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் கொட்டம் அடங்கும் எனவும் இணைய வாசிகள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.