Connect with us

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2023 சனிக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan Tamil, Today Rasipalan, Today Rasipalan www.tamizhakam.com, இன்றைய ராசிபலன், இன்றைய ராசிபலன் www.tamizhakam.com, இன்றைய ராசிபலன் தமிழ்

Today Rasi Palan

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2023 சனிக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2023 சனிக்கிழமை. எத்தனை இடர்கள் வந்தாலும் அதனை தகர்த்து எறிந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்க கூடிய மனிதர்களுக்கு பக்க பலமாக அவர்களது ஜாதகம் உள்ளது.

இந்த ஜாதகத்தின் அடிப்படையில் அவர்களுக்கு நன்மை மற்றும் தீமைகளை கணித்து அதற்கு ஏற்ற விதத்தில் திட்டமிட்டு செயல்படுவதின் மூலம் எண்ணற்ற நன்மைகளை அடைவதோடு மட்டுமல்லாமல் நமக்கு ஏற்படக்கூடிய அசுப பலன்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டு அதற்கு பரிகாரங்களையும் செய்ய முடியும். அந்த வரிசையில் இன்று மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி அன்பர்களுக்கு என்று கடினமான நாளாக இருக்கும். பொறுமையை இழந்து தவிப்பீர்கள். பணிகளை திட்டமிட்டு செயலாற்ற வேண்டும் இல்லையென்றால் காரியத்தில் சுணக்கங்கள் ஏற்படும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணியிடச் சூழலும் கடுமையான சூழ்நிலை நிலவுவதால் சக தொழிலாளிகளில் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்காது. அசௌரியங்கள் ஏற்படுவதால் பணியில் கண்ணும் கருத்துமாக இருக்கவும்.

நிதியை பொறுத்தவரை வீட்டை புலரமைக்க கட்டாயம் செலவு செய்ய வேண்டி இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை தாயாரின் உடல்நிலை குறைபாடுக்காக நீங்கள் பணவை பணத்தை செலவு செய்ய நேரிடலாம். இது உங்களுக்கு வருத்தத்தை தரும். எனவே ஆரோக்கியத்தில் கண்ணும் கருத்துமாக இருங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று உற்சாகமான நாள் முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு உகந்தநாள் என்பதால் நீங்கள் இன்று நல்ல முறையில் செயல்படலாம்.

தொழில் ஸ்தானத்தைப் பொறுத்தவரை கடின உழைப்பின் காரணமாக உங்கள் செயல் திறன் அதிகரித்து காணப்படும் அர்ப்பணிப்புகளுடன் பணிகளை செய்து வெற்றிகள் தருவீர்கள்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை பணவரவு அதிகரித்து காணப்படும். தொலைதூரத்தில் இருந்து பணங்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் நிதி நிலைமை நன்றாகவே இருக்கும்.

 ஆரோக்கியமும் மன தைரியம் காரணமாக மிகச் சிறப்பாக இருக்கும் எனவே உங்கள் மனநிலையும் உடல் நிலையும் இன்று ஆரோக்கியமாக இருப்பதால் ஆரோக்கியத்தை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

மிதுனம்

 மிதுன ராசி நேயர்களே இன்று சற்று மந்தமான உணர்வுகள் உங்களிடம் காணப்படுவதால் அதை தவிர்த்து விட்டால் நலம் கிடைக்கும். அதிக அளவு பணிகள் இருப்பதால் நீங்கள் அதை எளிதாக கையாள முயற்சி செய்து பழக வேண்டும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை உங்களுக்கு சாதகமான நாளாக அமைய வேண்டும் என்றால் நீங்கள் கட்டாயம் கடுமையாக உழைக்க வேண்டும். திட்டமிட்டு பணிகளை செய்தால் தான் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். எனவே தொழிலில் கவனத்தை செலுத்தவும்.

நிதி நிலமையை பொறுத்தவரை என்று அதிக அளவு செலவுகள் காணப்படுகிறது.பணம் செலவாகாமல் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் சாதுர்யமாகவும் திட்டமிட்டும் செலவுகளை நடத்த வேண்டும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை கண் எரிச்சல், முதுகு வலி, கால் வலி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பிரார்த்தனை மற்றும் மந்திரங்களை ஜெபித்ததின் மூலம் நீங்கள் இந்த வழிகளில் இருந்து நிவாரணம் பெற முடியும்.

கடகம்

 கடக ராசி அன்பர்களே இன்று அதிக பொறுப்பும் பதட்டமும் காணப்படுவதால் எதையும் விவேகமான முறையில் அணுகி அதில் வெற்றி கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்து செயல்பட வேண்டிய நாளாக உள்ளது.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ள வாய்ப்புக்கள் உள்ளது. எனவே பணிச்சுமை அதிகமாக காணப்படுவதால் உங்களிடம் பதட்ட உணர்வு இருக்கலாம். எனவே பதட்டத்தை தவிர்த்து பணியில் கவனத்தை செலுத்தவும்.

 நிதிநிலைமையைப் பொறுத்தவரை உங்கள் வீட்டில் சில மாற்றங்களை செய்வதற்காக நீங்கள் பணத்தை செலவு செய்ய வேண்டி இருக்கும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்துவதோடு கையில் இருக்கும் கையிருப்பும் குறையும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை ஆரோக்கியம் சுமாராகவே இருக்கும். தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம் எனவே தோல் நோய் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.

சிம்மம்

சிம்மராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் அவ்வளவு சிறப்பான நாளல்ல சிறிய சிறிய பிரச்சனைகள் உருவாகும்.அதை கையாள கடினமான முயற்சிகள் எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகும். எனவே கவனத்தோடு இருங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை தொழில் வளர்ச்சி ஓரளவு இருக்குமா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். பணி புரியும் இடத்தில் பணி சுமை அதிகரித்து காணப்படும். எனவே பணிகளை திட்டமிட்டு ஆற்றுங்கள்.

 நிதி நிலைமையை பொருத்தவரை முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பெரிய முதலீடுகள் முயற்சி எடுக்க வேண்டாம் .எடுத்தால் கடுமையான இழப்புகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

 பல்வலி செரிமானப் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் மிதமான உணவுகளை உட்கொள்ளவும் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே இன்று அனைத்து விதத்திலும் முன்னேற்றம் உங்களுக்கு ஏற்படும். ஆற்றல் மற்றும் உறுதி அதிகரித்து காணப்படுவதால் எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி பெறுவீர்கள்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை இன்று சுறுசுறுப்பாக பணியாற்றக்கூடிய நீங்கள் குறைந்த நேரத்தில் அதிக அளவு பணிகளை விரைந்து முடிக்க கூடிய தன்மை இருப்பதால் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

 பண வரவை பொறுத்தவரை இன்று அதிக அளவு இருக்கும். சம்பாதிக்கும் பணத்தை எப்படி சேமிக்கலாம் என்று திட்டமிட்டு செயல்படுவீர்கள்.

 ஆரோக்கியத்தில் இன்று ஆற்றல் அதிகரித்து காணப்படுவதால் உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும் எனவே ஆரோக்கியத்தை பற்றி கவலை கொள்ள வேண்டாம்.

துலாம்

 துலாம் ராசி நேயர்களே இன்று செயல்களை சிறப்பாக செய்து முடிக்க கூடிய நாளாக இருப்பதால் உங்கள் ஆற்றல் திறமை வெளிப்படும் கடின உழைப்பு மூலம் நீங்கள் வெற்றி இலக்கை எளிதில் பிடிப்பீர்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை கடினமான வேலைகளையும் எளிதாக முடிக்க கூடிய ஆற்றல் கொண்டவர்களாக இருப்பீர்கள். பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலை உருவாகும்.

 நிதி நிலைமை இன்று சிறப்பாக இருப்பதால் வங்கி இருப்பு அதிகமாக காணப்படும். பங்கு வர்த்தகம் லாபகரமாக இருக்கும். மேலும் முதலீடுகளில் ஆர்வம் செலுத்துவீர்கள்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை புத்துணர்ச்சியோடு இருக்கும் உங்களது ஆரோக்கியம் என்று சிறப்பாக இருப்பதால் ஆரோக்கியத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே நீங்கள் செய்த தவறுகளை சரி செய்ய வேண்டிய நாளாக அமைந்துள்ளது. உங்கள் செயல்களை முறையாக ஏற்பாடு செய்து ஒரு கட்டுக்கோப்போடு செய்யும் போது தான் நீங்கள் நினைத்தபடி எதுவும் நடக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளை பொறுமையோடு உறுதியோடும் நீங்கள் செய்ய வேண்டும். தவறுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதால் கண்ணும் பொருத்தமாக இருக்கவும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை செலவுகள் அதிகரிக்க கூடிய நாள் அதற்கு தகுந்தது போல் உங்கள் பணத்தை நீங்கள் திட்டமிட்டு செலவு செய்வது அவசியமான ஒன்று என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 ஆரோக்கியத்தை பற்றி தேவையில்லாத கவலைகள் மேலோங்கும் தோல் எரிச்சல் காரணமாக நீங்கள் தூக்கத்தை இழந்து தவிப்பீர்கள்.

தனுசு

 தனுசு ராசி அன்பர்களே இன்று எந்த ஒரு செயலிலும் வெற்றி பெறுவதற்காக நீங்கள் கடுமையான முயற்சிகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. திட்டமிட்டு முயற்சி செய்வதின் மூலம் மட்டுமே வெற்றி அடைய முடியும் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டால் எந்த நாளை உங்களது நாளாக மாற்றி விடலாம்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை அமைதியாக பணிகளில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் வெற்றியும் நல்ல பெயரும் கிடைக்கும். அமைதியாக இருப்பதற்காக நீங்கள் இறை வழிபாட்டில் கவனத்தை செலுத்துவது நல்லது.

 நிதி நிலைமையை பொறுத்தவரை அஜாக்கிரதை காரணமாக பல இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் உங்கள் பணத்தை கையாளும்போது கூடுதல் கவனம் தேவை.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை சற்று சுணக்கமான நாள் என்பதால் காய்ச்சல் சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மகரம்

 மகர ராசி நேயர்களே இன்று போதிய தைரியம் உங்களிடம் அதிக அளவு காணப்படுவதால் எடுக்கின்ற முயற்சிகளில் எல்லாம் நல்ல பலன் கிடைக்கும். பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. அந்த பயணத்தின் மூலமும் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிபுரியும் இடத்தில் வெற்றிகள் அதிக அளவு கிடைக்கும். ஆற்றல் மிகுந்த நாளாக இன்று இருப்பதால் தன்னம்பிக்கை அதிகரித்து பணிகளை  விரைவில் செய்து முடிப்பீர்கள்.

 நிதி நிலைமையை பொருத்தவரை பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும் .உழைப்புக்கு ஏற்ற ஊதியம் மற்றும் அதற்கான மேல் அதிக தொகை உங்களுக்கு கட்டாயம் வந்து சேரும். சில சலுகைகளும் கிடைப்பதால் பணம் கூடுதலாக உங்கள் கையில் இருக்கும்.

 ஆரோக்கியத்தைப் பற்றி எந்தவிதமான கவலையும் தேவையில்லை என்று சிறப்போடு இருப்பதால் நீங்கள் உறுதியோடும் புத்துணர்ச்சியோடும் இருங்கள்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று நீங்கள் உங்கள் சுய மேம்பாட்டுக்காக இந்த நாளை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளலாம். நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு இன்று அதிக அளவு கிடைக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளை விருப்பமாக நீங்கள் செய்வீர்கள். எனினும் கடின உழைப்பு இருந்தால் மட்டும்தான் எடுக்கின்ற பணிகளில் வெற்றியை பெற முடியும் என்பதை புரிந்து செயல்படுங்கள்.

நிதி நிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமாக இருக்கு.ம் வங்கிகளின் இருக்கும் தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் நீங்கள் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள்.

 ஆரோக்கியமும் என்று நம்பிக்கையோடு இருப்பதால் எந்த விதமான அச்சமும் தேவையில்லை ஆரோக்கியம் என்று சூப்பராக உள்ளது.

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று கடினமான பணிகளையும் நீங்கள் மிக விரைவாகவும் எளிதாகவும் செய்து முடிப்பீர்கள் என்றாலும் சிறந்த முறையில் திட்டமிட வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணியில் சற்று பொறுமை இழந்து காணப்படுவீர்கள். தொழில் சார்ந்த அணுகுமுறையால் பணிகளை சரிவர ஆற்றக்கூடிய ஆற்றல் உங்களுக்கு ஏற்படும்.

 நிதி நிலை பொறுத்த வரை பண வரவும் செலவும் சமமாக இருப்பதால் எதிர்காலத்துக்காக பணத்தை சேமிக்க வேண்டும் என்பதில் நீங்கள் கடுமையான முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று பதட்டமான சூழ்நிலையாக இருப்பதால் மனக்குழப்பத்தோடு உங்களது ஆரோக்கியம் காணப்படும். சொந்த வளர்ச்சிக்கு என்ன செய்வது என்பது பற்றி யோசிப்பீர்கள். எனவே ஆரோக்கியத்தில் சற்று அக்கறை காட்டுங்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top