“தென் கொரிய நிறுவனத்தில் ஒப்பந்தம்..!”- வேதாந்தா நிறுவனம்..!

வேதாந்தா நிறுவனம்: வேதாந்த நிறுவனமானது குஜராத்தில் தைவானை சேர்ந்த ஃபாக்ஸ்கானுடன் இணைந்து கூட்டு முயற்சியில் செமி கண்டக்டர் ஆலையை அமைக்க தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த வேதாந்த நிறுவனம் ஆனது டிஸ்ப்ளே யூனிட் அமைக்க தென் கொரிய நிறுவனங்களோடு கைகோர்க்க விண்ணப்பிக்கின்றது.

இந்தியாவில் எலக்ட்ரானிக்கல் பொருட்களின் உற்பத்தியை மேம்படுத்தக்கூடிய ஒரு மையத்தை உருவாக்க தென்கொரிய நிறுவனங்களோடு பாட்னர்ஷிப்பை உருவாக்கி வரும் வேதாந்த நிறுவனம் சுமார் 20-க்கும் மேற்பட்ட தென் கொரிய நிறுவனங்களோடு இணைந்து பணியாற்ற உள்ளது.

vedanta

இதனை அடுத்து இந்த குறிப்பிட்ட 20 கொரிய நிறுவனங்களில் கையெழுத்திட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதை வேதாந்தா குழுமம் அண்மையில் அறிவித்துள்ளது.

இதனை எடுத்து தென் கொரிய அரசாங்கத்தின் வர்த்தகம் மேம்பாட்டு பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட கொரியா பிஸ் டிரேட் ஷோ 2023 நிகழ்வில் தான் அணில் அகர்வால் தலைமைகளான குழு இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

--Advertisement--

இதை அடுத்து இந்த வேதாந்த நிறுவனத்தின் செமி கண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே பிசினஸ் இன் குளோபல் மேனேஜிங் டைரக்டர் ஆன ஆகர்ஷ் ஹெப்பர் கூறுகையில் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வேதாந்தா நிறுவனத்தோடு கைகோர்க்க ஆர்வமாக இருந்ததாக கூறினார்.

vedanta

மேலும் பல நிறுவனங்கள் எலக்ட்ரானிக்ஸ் ஹெப் அமைக்கும் முயற்சிக்கும் பார்ட்னராக வரும்படி அழைப்பு விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். 150 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை ஈர்க்கக்கூடிய திறன் கொண்டதாகவும் எதிர்காலத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் இதன் மூலம் உருவாகும் என்று கூறியிருக்கிறார்.

அரசின் சாதகமான கொள்கை முடிவால் இந்தியாவை மின்னணு மையமாக மாற்ற தீவிரம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முன்மொழிக்கப்பட்ட எலக்ட்ரானிக் ஹெப்பில் வேதாந்தாவின் டிஸ்ப்ளே மேனுஃபாக்சரிங் பெசிளிட்டி குறிப்பிடத்தக்க இடத்தை பிடிக்கும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் வேதாத்தாவின் டிஸ்ப்ளே மேனுஃபாக்சரிங் பிசினஸ் ஆனது அதன் யூனிட் Avanstrate Inc மூலம் வழிநடத்தப்படுகிறது என்பது அனைவருக்குமே நன்கு தெரியும்.

vedanta

 மேலும் இது எல் சி டி பேனல்களில் பயன்படுத்தப்படும் சிறப்பு கிளாசை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறது. இதனை அடுத்து தென்கொரியா மற்றும் தைவானில் உற்பத்தி செய்யப்படக்கூடிய வழிமுறைகளையும் இது பின்பற்றும்.

மேலும் இந்த நிறுவனம் ஏ ஆர் /விஆர்- க்கான பேப்பர் கிளாஸ், அல்ட்ரா தின் கிளாஸ் மற்றும் கிளாசுகளை உருவாக்கும் பணியில் ஈடுபட உள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் இது போன்ற யூனிட்டுகளை அதிகமாக அமைக்க குளோபல் செமி கண்டக்டர் மற்றும் அதன் உற்பத்தியாளர்களை ஈர்க்க ரு 76 கோடியில் ப்ரொடக்ஷன் லிங்கிடு இன்சென்டிவ் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.