படுக்கைக்கு அழைத்தார்.. உள்ளே சென்று கதவை அப்படி மூடினேன்.. அஜித் பட நடிகை அதிர்ச்சி தகவல்..!

பாலிவுட் படங்களில் நடித்தும், விளம்பர படங்களில் நடித்தும் மக்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றவர் வித்யா பாலன். வணிகரீதியான விளம்பரங்களில் நடித்த வகையில் மக்கள் மத்தியில் நல்ல ஒரு அறிமுகத்தை பெற்றவர். குறிப்பாக பிலிம்பேர் சிறந்த அறிமுக நடிகை என்ற விருதை பெற்றவர்.

வித்யா பாலன்

இந்தி திரைப்படம் பலோ தேகோ என்ற படத்தில் நடித்து, வித்யா பாலன் சினிமாவில் அறிமுகமானார்.

கேரளா பாலக்காட்டைச் சேர்ந்தவர். விளம்பர மாடல் அழகியாக இருந்து ஏராளமான விளம்பரங்களில் நடித்திருக்கிறார்.

இவரது ஆரம்பகால வாழ்க்கை, தமிழ் பேசும் ஐயர் குடும்பத்தில் பிறந்தவர். இவர் தனது பள்ளிப் படிப்பை கேரளாவில் முடித்தவர். மும்பை பல்கலைக்கழகத்தில் முதுகலை எம்ஏ படிக்கும் போதுதான் வித்யாபாலன், பலோ தேகோ என்ற வங்காள திரைப்பட வாய்ப்பு பெற்றார்.

--Advertisement--

வித்யாபாலனுக்கு பதிலாக மீரா ஜாஸ்மின்

முதன்முதலாக, மலையாளத்தில் மோகன்லாலுடன் சக்கரம் என்ற படத்தில் நடிக்க வித்யாபாலன் ஒப்பந்தமானார். ஆனால் அந்த படம் தள்ளி வைக்கப்பட்டது. தமிழில் ரன் படத்தில் நடிக்கவும் அவர் ஒப்பந்தமானார். ஆனால் அந்தப் படமும் அவரால் நடிக்க முடியவில்லை. பிறகு சக்கரம் என்ற படத்தில் வித்யா பாலனுக்கு பதிலாக, மீரா ஜாஸ்மின் நடித்தார்.

அதே போல், மனசெல்லாம் என்ற படத்தில் தமிழ் படத்திலும் வித்யாபாலன் கமிட் ஆன நிலையில், அவருக்கு பதிலாக திரிஷா நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விளம்பர படங்களில்…

சினிமாவில் இப்படி தொடர்ந்து வாய்ப்புகளை இழந்த வித்யாபாலன், அதன் பிறகு தொலைக்காட்சி விளம்பர படங்களில் அதிகமாக நடித்தார்.
இதற்கிடையே தசாவதாரம் படத்தில் கமல்ஹாசனுக்கு நடிக்க ஒப்பந்தம் செய்த பின் பிறகு, அந்த படத்திலும் நடிக்கும் வாய்ப்பை மறுத்துவிட்டார் வித்யா பாலன்.

சில்க் ஸ்மிதா கேரக்டரில்

தமிழில் நடித்த த டர்ட்டி பிக்சர் படத்தில், சில்க் ஸ்மிதா கேரக்டரில் நடித்த பிறகுதான் இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது சிறந்த நடிகை விருதுகள் கிடைத்தன. சில்க் ஸ்மிதாவாக வித்யாபாலன் நடித்தது, பெரிய அடையாளத்தை அவருக்கு கொடுத்தது.

நேர்கொண்ட பார்வை படத்தில்…

அதன்பிறகு பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் நடிகை வித்யா பாலன், தமிழில் கடைசியாக நடித்த படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்துக்கு பிறகு அவர் தமிழில் இதுவரை நடிக்கவில்லை.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட வித்யா பாலன், தனக்கு நேர்ந்த ஒரு கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

ஓட்டலுக்கு வருமாறு கட்டாயப்படுத்தினார்

அதில் அவர் கூறியதாவது, என்னை ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர். நான் விளம்பர படப்பிடிப்புக்காக சென்னை வந்திருந்தேன். அப்போது அந்த படத்தின் இயக்குனர், என்னை ஹோட்டல் அறைக்கு வரும்படி கட்டாயப்படுத்தினார்.

அவரது எண்ணம் புரிந்து விட்டது

அப்போது அவருடைய எண்ணம் என்னவென்று எனக்கு புரிந்து விட்டது. நான் அந்த ஹோட்டல் அறைக்குச் சென்று கதவை பாதி மூடி வைத்து, அவரிடம் பேசினேன்.

நான் ஒத்துழைக்க மாட்டேன்

இந்த மாதிரியான தவறான விஷயத்துக்கு நான் ஒத்துழைக்க மாட்டேன் என்று அவர் புரிந்து கொண்டு, அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார்.
அதையடுத்து என்னை படத்தில் இருந்து நீக்கிவிட்டார் என்று வித்யா பாலன் அந்த நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.

அந்த இயக்குனர் படுக்கைக்கு அழைத்தார். ஓட்டல் அறைக்குள் உள்ளே சென்று பாதி கதவை மூடினேன் என்று அஜித் பட நடிகை வித்யாபாலன் கூறிய தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.