ஷாம்-ஐ வீடு புகுந்து மிரட்டிய தயாரிப்பாளர்..! – கேப்டனுக்கு கால் செய்த அடுத்த நொடி நடந்த அதிசயம்..!

நடிகர் ஷாம் கடந்த 2000 ஆம் ஆண்டு இயக்குனர் எஸ் கே சூர்யா நடிப்பில் வெளியான இயக்கத்தில் வெளியான குஷி திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு 12B என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதன் பிறகு ஏன் நீ ரொம்ப அழகாய் இருக்கே, பாலா, அன்பே அன்பே, லேசா லேசா இயற்கை என அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக நடித்து வந்த ஷாம் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்தார்.

காப்பாற்றிய கேப்டன்..

சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜயின் சகோதரராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட ஷ்யாம் தன்னுடைய வாழ்க்கை நிகழ்வுகள் பலவற்றையும் பகிர்ந்து கொண்டார்.

அதில் முக்கியமாக ஒரு பிரச்சனையின் போது கேப்டன் விஜயகாந்த் எப்படி என்னை காப்பாற்றினார் என்று என்பது குறித்து இவர் பேசிய பேச்சு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

12B நடித்த முடித்த பிறகு அடுத்த ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக ஒப்பந்தமாக இருக்கிறார் நடிகர் ஷாம். அந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து டப்பிங் பணிகள் ஆரம்பமாகி இருக்கிறது.

--Advertisement--

ஷாமின் வீட்டில் அடியாட்கள்..

அப்போது தயாரிப்பாளர் டப்பிங் பண்ணி முடித்த பிறகு நான் மீதி சம்பளத்தை கொடுக்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால், பொதுவாக நடிகர்கள் டப்பிங் பேசுவதற்கு முன்பே அனைத்து சம்பளத்தையும் வாங்கி விடுவது வழக்கம்.

எனவே தயாரிப்பாளரிடம் என்னுடைய மீதி சம்பளத்தை கொடுத்தால் தான் டப்பிங் பேசுவேன் என்று கூறியிருக்கிறார் நடிகர் ஷாம். இதனை தொடர்ந்து ஷாமின் வீட்டுக்கு அடியாட்களை அனுப்பி அவரை மிரட்டி இருக்கிறார் தயாரிப்பாளர்.

இது இனிமே என்னோட பிரச்சனை..

உடனே ஷாம் கேப்டன் விஜயகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இருக்கிறார். தொடர்பு கொண்டு நடந்த விஷயங்களை கூறியிருக்கிறார் .அடுத்த நிமிடமே அந்த தயாரிப்பாளருக்கு போன் செய்த கேப்டன் விஜயகாந்த் இது இனிமேல் என்னுடைய பிரச்சினை இதற்கு மேல் அவருடைய வீட்டில் யாரும் இருக்கக்கூடாது என்று கூறியிருக்கிறார்.

அடுத்த சில நிமிடங்களில் அங்கிருந்த அடியாட்கள் ஷாமின் வீட்டை விட்டு கிளம்பி இருக்கின்றனர். அதன் பிறகு தயாரிப்பாளிடமும் ஷாமிடமும் பேசிய அவர்களுடைய சம்பள பிரச்சினைகளையும் சமூகமாக பேசி முடித்திருக்கிறார் விஜயகாந்த். இந்த அனுபவத்தை நான் எப்போதும் மறக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார் நடிகர் ஷாம்.

Summary in English : Actor Captain Vijayakanth stepped in to settle a dispute between producer and actor Sham. The incident occurred on the house of Sham claiming that he was not paid the salary he was promised. Captain Vijayakanth’s intervention to resolve the matter peacefully is commendable, and has shown that even in times of disagreement, civil discussion is possible.