ஜாஃபர் சாதிக்கால் சிக்கிய உதயநிதி.. கோட்டை விட்ட உளவுத்துறை.. போட்டு உடைத்த பிரபலம்..

ஜாஃபர் சாதிக்கால் சிக்கிய உதயநிதி.. கோட்டை விட்ட உளவுத்துறை.. போட்டு உடைத்த பிரபலம்..

அமீர் நடித்த இறைவன் மிகப்பெரியவன் மற்றும் மங்கை ஆகிய படங்களை தயாரித்தவர் ஜாபர் சாதிக். இவர் தற்போது போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியிருக்கிறார். இதனால் இந்த படங்கள் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது.

கடந்த வெள்ளியன்று வெளியாக வேண்டிய மங்கை படம் வெளிவரவில்லை. இந்த படத்தில் 10 ஆண்டுகளுக்கு பின் கயல் ஆனந்தி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் கதாநாயகியை மையப்படுத்திய படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜாபர் சாதிக்

சமீபத்தில் 2000 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டதும் அதற்கு பின்னால் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்ற பிரபல திரைப்பட தயாரிப்பாளர் இருப்பதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதில் நடிகர் அமீர், இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோருடைய பெயர்களும் அடிபடுவதை பார்க்க முடிகிறது.

அமீர், வெற்றிமாறன்

ஆனால் அமீர் மற்றும் வெற்றிமாறன் ஆகிய இருவரும், இதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று விளக்கம் கொடுத்திருக்கின்றனர். நாளுக்கு நாள் பூதாகரமாக வளர்ந்து வருகிறது இந்த விவகாரம்.

இதையும் படியுங்கள்: என்னது விஜய் என் நண்பரா..? ஹலோ.. அப்டி சொல்றது…” டாப் ஸ்டார் பிரசாந்த் ஒரே போடு..

இந்நிலையில்தான் பிரபல பத்திரிகையாளர் மணி பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறார். அவர் கூறியதாவது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போதை பொருள் புழக்கம் தமிழகத்தில் அதிகரித்து இருக்கிறதா..? என்று கேட்டால் ஆமாம் அதிகரித்து இருக்கிறது .அது உண்மைதான்.

ஆளுங்கட்சியுடன் தொடர்பு

அதேபோல ஒரு கட்சி போதை மருந்து களத்தில் ஈடுபடுமா என்று கேட்டால் ஈடுபடாது. அந்தக் கட்சியின் இருக்கக்கூடிய முக்கியஸ்தர்கள் குறிப்பாக ஆளுங்கட்சியில் இருக்க கூடிய முக்கியஸ்தர்கள் இப்படியான விஷயங்கள் ஈடுபடுவது வாடிக்கை.

தங்களுடைய பாதுகாப்புக்காக எப்படியாவது ஆளுங்கட்சியுடன் தங்களை தொடர்பு படுத்திக் கொள்ள முயற்சி செய்வார்கள். இப்படியான கடத்தல் தொழிலில் ஈடுபடக்கூடிய நபர்கள் இங்கே நான் இருக்கக்கூடியவர்கள்.

உதயநிதி ஸ்டாலினுடன்

இதில் கேள்வி என்னவென்றால், ஜாபர் சாதிக் உதயநிதி ஸ்டாலினுடன் நெருக்கமாக இருக்கிறார். முதல்வரின் குடும்பத்துடன் நெருக்கமாக இருக்கிறார்.

ஒரு நாட்டின் உளவுத்துறை என்பது, அந்த நாட்டின் அமைச்சர், முதலமைச்சர் ஆகியோருடன் ஒருவர் நெருக்கம் காட்டுகிறார். அவருடைய பின்புலம் என்ன, ஏதேனும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கிறாரா, அவருடைய குடும்ப வரலாறு என்ன என ஏழு தலைமுறைக்கும் நோண்டி பார்த்து வருவது வழக்கம்.

இதையும் படியுங்கள்: சூர்யாவா இருந்தா என்ன..? கேட்டதை வைங்க.. ராஷ்மிகா போட்ட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்.. அடி ஆத்தி..

ஆனால் தமிழக உளவுத்துறை, இங்கே கோட்டை விட்டு இருக்கிறது. இதனால் உதயநிதிக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. முதல்வர் ஸ்டாலினுக்கும் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

காலம் காலமாக திமுக கட்சியில் இருப்பவர்கள் கூட உதயநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் நெருக்கமாக முடியுமா என்றால் கஷ்டம்தான்.

விசாரிக்க வேண்டாமா?

ஆனால் திடீரென ஒருவர் உதயநிதி மற்றும் அவருடைய குடும்பத்தினருடன் நெருக்கமாகிறார் என்றால், இதனை விசாரிக்க வேண்டாமா? இப்போது யாருக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது என பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறார் பத்திரிக்கையாளர் மணி

நேர்காணலில் ஜாஃபர் சாதிக்கால் சிக்கிய உதயநிதி, கோட்டை விட்ட உளவுத்துறை குறித்து போட்டு உடைத்திருக்கிறார் பிரபல பத்திரிகையாளர் மணி.