கடற்கரை ஓரத்தில் காதலனுடன் போலீசில் சிக்கிய தகவல் - பிக்பாஸ் ஜூலி விளக்கம்..!


ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு கோசம் போட்டிருந்தார் இந்த ஜூலி. இதையடுத்து “ஜல்லிக்கட்டு போராளி”, “தமிழ்ப் போராளி” என்றும் பலர் இவரை அழைக்க ஆரம்பித்தனர்.

ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து எழுதியது யார் என்ற கேள்விக்கு, தாயுமானவர் என பதிலளித்து அதிர்ச்சி ஏற்படுத்தினார். தவிர நிகழ்ச்சியில் பங்குகொண்டிருக்கும் காயத்ரி ரகுராம் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டியதின் அவசியம் குறித்து கேட்டபோதும் பதில் சொல்ல முடியாமல் திணறினார்.

இதையடுத்து, “தன்னை தமிழ்ப் போராளி என்று சொல்லிக்கொள்ளும் ஜூலிக்கு தான் ஏன் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டோம் என்பதே ஜூலிக்கு தெரியவில்லையே” என்று விமர்சிக்க ஆரம்பித்தனர். அப்படி ஆரம்பித்து தன்னுடைய அடுத்தடுத்த செயல்பாடுகளால் சரியான அவப்பெயரை பெற்றார் போராளி ஜூலி.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகும் ஜூலியை சோசியல் மீடியாவில் வறுத்தெடுப்பதை நெட்டிசன்கள் கைவிடவில்லை. ஜூலி என்ன செய்தாலும், அதை மீம்ஸ் கிரியேட் செய்து கலாய்த்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இடையில் பட வாய்ப்புகள், கடை திறப்பு விழா, கல்லூரி நிகழ்ச்சிகள் என பிசியாக வலம் வந்தார்.ட்விட்டரில் படு ஆக்டிவாக வலம் வந்த ஜூலி தனது விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பகிர்ந்து வந்தார். ஆனால் ஜூலி என்ன செய்தாலும் நெட்டிசன்கள் ஓவராக கலாய்த்து வந்தனர்.


அவர் தொழிலதிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும் அவருடன் ஜூலி லிவிங் டுகெதர் வாழ்க்கையில் இருப்பதாகவும். கடற்கரையோரத்தில் காதலனுடன் போலீசில் சிக்கினார் என்று தகவல் பரவியது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த நடிகை ஜூலி, அதை மறுத்துள்ளார். அந்தச் செய்தியை தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ள ஜூலி, அதுபற்றி விளக்கம் அளித்திருக்கிறார்.

கடற்கரை ஓரத்தில் காதலனுடன் போலீசில் சிக்கிய தகவல் - பிக்பாஸ் ஜூலி விளக்கம்..! கடற்கரை ஓரத்தில் காதலனுடன் போலீசில் சிக்கிய தகவல் - பிக்பாஸ் ஜூலி விளக்கம்..! Reviewed by Tamizhakam on August 02, 2020 Rating: 5
Powered by Blogger.