பிகினி உடையில் நீச்சல் குளத்தில் ஆண் நண்பருடன் அந்த கோலத்தில் பூனம் பாஜ்வா - தீயாய் பரவும் புகைப்படம்..!


தனது நெருங்கிய ஆண் நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கும் பூனம் பாஜ்வா அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் சோஷியல் மீடியாவில் பதிவேற்றியுள்ளார். 
 
மும்பையில் பிறந்து வளர்ந்த பஞ்சாபி பொண்ணு பூனம் பாஜ்வா. முடதி சினிமா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தங்கிகை என்ற கன்னடப் படத்தின் மூலம் கன்னடத்திலும், சேவல் என்ற படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். 
 
தெலுங்கில் நடிகையாக அறிமுகமான பூனம் பாஜ்வா தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். அதன்பிறகு கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மணை 2 உள்பட பல படங்களில் நடித்தார். 
 
பூனம் பாஜ்வாவின் காதல் பற்றியும், கல்யாணம் பற்றியும் அடிக்கடி தகவல்கள் வெளியாகும், சில நாட்களுக்கு பிறகு அதனை அவர் மறுப்பார். இந்த நிலையில் நேற்று அவருக்கு பிறந்த நாள். இந்த நாளில் தனது காதலனை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். 
 
அவர் பெயர் சுனில் ரெட்டி, இவரை பூனம் பாஜ்வா காதலிப்பதாக 2 ஆண்டுகளுக்கு முன்பே தகவல் வெளியானது. ஆனால் அதனை பூனம் பாஜ்வா மறுத்து வந்தார். நேற்று உண்மையை ஒப்புக் கொண்டு அறிவித்தார். அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இதுகுறித்து கூறியிருப்பதாவது: என் அன்புக்குரியவர் என்னருகில் இருக்கிறார். 
 
இதைவிட மகிழ்ச்சி வேறெதுவும் இல்லை. அவரது அளவற்ற அன்பால் நெகிழ்ந்து போயிருக்கிறேன். இன்று எனது பிறந்த தினம், சிறந்த தினமாக மாறி இருக்கிறது. என்று குறிப்பிட்டிருக்கிறார். 
 
 
அடுத்த ஆண்டு திருமணம் நடக்கும் என்று தெரிகிறது.கடைசியாக ஜி.வி.பிரகாஷ் உடன் ‘குப்பத்துராஜா’ படத்தில் நடித்திருந்த பூனம் பாஜ்வா, அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.
 
 
தற்போது தனது ஆண் நண்பர் சுனில் ரெட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கும் பூனம் பாஜ்வா அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவேற்றியுள்ளார்.


 
பூனம் பாஜ்வா - சுனில் ரெட்டி புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் இவர்தான் உங்களது வருங்கால கணவரா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிகினி உடையில் நீச்சல் குளத்தில் ஆண் நண்பருடன் அந்த கோலத்தில் பூனம் பாஜ்வா - தீயாய் பரவும் புகைப்படம்..! பிகினி உடையில் நீச்சல் குளத்தில் ஆண் நண்பருடன் அந்த கோலத்தில் பூனம் பாஜ்வா - தீயாய் பரவும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on October 29, 2020 Rating: 5
Powered by Blogger.