நயன்தாரா போர் அடிச்சுருச்சா..? - படத்தில் இருந்து நயன்தாராவை தூக்கியடித்த டாப் நடிகர்..!


தெலுங்கு நடிகரான சிரஞ்சீவி தனது இரண்டாவது இன்னிங்ஸில் சீரான இடைவெளியில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தற்போது கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஆச்சார்யா படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து சிரஞ்சீவியின் 153வது படத்தை இயக்குனர் மோகன்ராஜா இயக்க உள்ளார். 
 
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெற்றிபெற்ற லூசிபர் படத்தின் ரீமேக் ஆக இந்தப்படம் உருவாகிறது. இன்னும் 152வது படம் முடிவடையாத நிலையில் 153வது படம் துவங்கப்படாத நிலையில் அவரது 154வது படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவீந்திரா (பாபி) என்பவர் இயக்க உள்ளார் என்கிற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. 
 
'உப்பென்னா' படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது, மேடையில் தானாகவே இதனை அறிவித்த சிரஞ்சீவி, இந்தப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது என்பதையும் அறிவித்தார். 
 
கன்னடம் மற்றும் தெலுங்கில் பிரபல கதாசிரியராக விளங்குபவர் இயக்குனர் கே.எஸ்.ரவீந்திரா. கடந்த சில வருடங்களுக்கு முன் ரவிதேஜா நடித்த பவர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், பவன் கல்யாணின் கப்பார் சிங், ஜூனியர் என்.டி.ஆரின் ஜெய் லவகுசா மற்றும் வெங்கடேஷ் நடித்த வெங்கி மாமா ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். 
 
 
இந்நிலையில், மலையாளத்தில் வெற்றி பெற்ற லூசிபர் படம், தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க ரீ-மேக் ஆகிறது. மலையாள கதையை எடுத்து கொண்டு தெலுங்குக்காக பல மாற்றங்களை செய்துள்ளார் இயக்குனர் மோகன் ராஜா இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் நயன்தாரா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க இருந்தார். 
 
ஆனால், தற்போது நயன்தாராவை ஓரம் கட்டி விட்டு தமன்னாவிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். சிரஞ்சீவி நடிப்பில் கடைசியாக வெளியான சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் தமன்னாவும், நயன்தாராவும் நடித்திருந்தனர். 
 
மீண்டும் நயனுடன் ஜோடி சேர்ந்து சிரஞ்சீவி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த ஜோடியை மீண்டும் திரையில் காண ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் நயனை விட்டு விட்டு தமன்னா, த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நயன்தாரா போர் அடிச்சுருச்சா..? - படத்தில் இருந்து நயன்தாராவை தூக்கியடித்த டாப் நடிகர்..! நயன்தாரா போர் அடிச்சுருச்சா..? - படத்தில் இருந்து நயன்தாராவை தூக்கியடித்த டாப் நடிகர்..! Reviewed by Tamizhakam on February 08, 2021 Rating: 5
Powered by Blogger.