தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகில் பிரபலமாகி வரும் நடிகை கயாடு லோஹர், டிராகன் (2025) படத்தின் மூலம் ஒரே இரவில் நட்சத்திரமாக மாறினார்.
அசாமைச் சேர்ந்த இவர், 2021-ல் கன்னட படமான முகில்பேட்டே மூலம் அறிமுகமாகி, பின்னர் பதோன்பதாம் நூட்டாண்டு, அல்லூரி போன்ற படங்களில் நடித்து கவனம் பெற்றார்.
டிராகன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஜய்யின் ஜனநாயகன், சூர்யாவின் தெலுங்கு படம், சிம்புவின் STR 49, ஜி.வி. பிரகாஷின் இம்மோர்ட்டல், ஆதர்வாவின் இதயம் முரளி உள்ளிட்ட பல படங்களில் அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.
இளைஞர்களிடையே மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்ற இவர், தற்போது தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் சிக்கியதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் இந்த விவகாரத்தில், அமலாக்கத்துறை (ED) நடத்திய சோதனைகளில், ஊழல் பணத்தில் இயங்கிய Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல நடிகர்களுக்கு ரொக்கமாக சம்பளம் வழங்கப்பட்டதாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இதில், கயாடு லோஹர், ஊழல் விவகாரத்தில் சிக்கியவர்கள் நடத்திய “நைட் பார்ட்டிகளில்” கலந்துகொண்டு, ஒரு இரவுக்கு ரூ.35 லட்சம் பெற்றதாகவும், இதற்கு CCTV ஆதாரங்கள் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளுக்கு கயாடு லோஹர் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த பதிலையும் அளிக்கவில்லை.
இந்த செய்திகளை “பொய்யானவை” எனவும், தன்னை அவதூறாக இழிவுபடுத்துவதாகவும் இதுவரை ஆட்சேபனை எதுவும் தெரிவிக்காமல் இருக்கிறார் கயாடு லோகர்.
மேலும், இளம் அமைச்சர் ஒருவருடனும் கயாடு லோகர் நெருக்கமாக இருந்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன என்றும் கோடிக்கணக்கான ரூபாய்களை ரொக்கமாகவே கயாடு லோகர் பெற்றதற்குண்டான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது விரைவில் கயாடு லோகர் ED விசாரணை வளையத்திற்குள் வருவார் என்று கூறப்படுகின்றது.
இந்த விவகாரம், தமிழ் சினிமாவில் கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் நடவடிக்கைகளை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
ரசிகர்கள், கயாடுவின் திறமையையும், அவரது எதிர்கால பயணத்தையும் ஆதரித்து வரும் நிலையில், இந்த சர்ச்சை அவரது வளர்ந்து வரும் தொழில் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து விவாதங்கள் நடைபெறுகின்றன.
மேலும், யார் அந்த இளம் அமைச்சர்.. இவர் தான்.. அவர் தான் என பல்வேறு விவாதங்கள் இணைய பக்கங்களில் கிளம்பியுள்ளன.