இளம் அமைச்சருடன் கயாடு லோஹர்.. சிக்கிய ஆதாரம்.. இவர் தான் அந்த அமைச்சர்?
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகில் பிரபலமாகி வரும் நடிகை கயாடு லோஹர், டிராகன் (2025) படத்தின் மூலம் ஒரே இரவில் நட்சத்திரமாக மாறினார். அசாமைச் சேர்ந்த இவர், 2021-ல் கன்னட படமான முகில்பேட்டே மூலம் அறிமுகமாகி, பின்னர் பதோன்பதாம் நூட்டாண்டு, அல்லூரி போன்ற படங்களில் நடித்து கவனம் பெற்றார். டிராகன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஜய்யின் ஜனநாயகன், சூர்யாவின் தெலுங்கு படம், சிம்புவின் STR 49, ஜி.வி. பிரகாஷின் இம்மோர்ட்டல், ஆதர்வாவின் இதயம் முரளி உள்ளிட்ட பல படங்களில் அவர் ஒப்பந்தமாகியுள்ளார். இளைஞர்களிடையே மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்ற இவர், தற்போது தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் சிக்கியதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் இந்த விவகாரத்தில், அமலாக்கத்துறை (ED) நடத்திய சோதனைகளில், ஊழல் பணத்தில் இயங்கிய Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல நடிகர்களுக்கு ரொக்கமாக சம்பளம் வழங்கப்பட்டதாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதில், கயாடு லோஹர், ...