இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்பார்கள் என்று கிராமப்புறங்களில் ஒரு சொல்லாடல் தற்போதும் வழக்கத்தில் இருக்கிறது. இதற்கு உதாரணமாக மாறி இருக்கிறது சமையல் பிரபலமான முன்னணி நடிகரும், டெய்லர் பிரபலமும் செய்த வேலை.
தமிழ் சினிமாவின் முன்னணி ஜாம்பவான்களான பல நடிகர்களுக்கு டெய்லர் வேலை பார்த்து பிரபலமான பெண்ணும்..தமிழ் சினிமாவின் முன்னணி ஜாம்பவான்களான பல நடிகர்களுக்கு சமையல் வேலை பார்த்து பிரபலமான ஆணும் சேர்ந்து அடித்த கூத்து பலரையும் காரி துப்ப வைத்துள்ளது.

நண்டு கொழுத்தால் வளையில் தங்காது என்பதற்கு உதாரணமாக பண போதையில் ஒரு பெண், இரண்டு குழந்தைகளின் வாழ்க்கையை கேள்வி குறி ஆக்கியுள்ளது இந்த கொடூர ஜோடி.
ஏற்கனவே திருமணம் ஆன சமையல் காரருக்கு ட்ரெஸ் தைத்து கொடுக்கும் டெய்லர் வேலைக்கு சேர்ந்த பெண்மணி அவருடன் நெருக்கத்தை வளர்த்துக் கொண்டார்.
அதே சமயம், சமையல் காரருக்கு விவாகரத்தான பெண்கள் என்றால் அலாதி பிரியமாம். அந்த வகையில், தன்னுடைய கணவரை விவாகரத்து செய்துவிட்டு இருக்கும் இந்த பெண் டெய்லருக்கு தன் மீது ஒரு ஈர்ப்பு இருப்பதை உணர்ந்த அவர் அவரிடம் நெருங்கி பழக ஆரம்பித்து ஒரு கட்டத்தில் இருவரும் அடிக்கடி தங்களுடைய காதலை ரிசார்டுகளில் கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் சமையல் காரரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்ட டெய்லர் பலமுறை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டு இருக்கிறார். ஆனால், சமையல் காரர் மறுத்திருக்கிறார்.
.jpg)
இது பற்றி பெரிய எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல். உறவாடி கெடுக்கும் வேளையில் ஈடுபட்டிருக்கிறார் அந்த டெய்லர். காரணம், எத்தனை நாளைக்கு தான் கிழிஞ்ச துணியை தச்சிகிட்டு இருக்கிறது.. நாமளும் வாழ்கையில் சட்டு புட்டுன்னு செட்டில் ஆகணும் இல்ல என்ற திட்டம் தான் என்கிறார்கள். இந்த சமையல் காரர் வெறும் சமையல் காரர் அல்ல கோடிக்கணக்கில் சம்பளம்.. தனியாக ஜெட் விமானம்.. ஏக்கர் கணக்கில் சொத்து என கொஞ்சம் ஏக போகமான சமையல்காரர்.
இப்படி கோடிகளில் புரண்டு கொண்டிருக்கும் இந்த சமையல் காரரை தன்னுடைய கைக்குள் போட்டுக் கொள்ள முடிவு செய்த அந்த ஆடெய்லர் ஒருமுறை தனிமையை கொண்டாடும்போது அவருக்கு தெரியாமல் ஆணுறையில் ஓட்டை போட்டு.. அதன் மூலம் கர்ப்பமாகி இருக்கிறார் என்ற தகவல் கோடம்பாக்க வட்டாரத்தில் காத்து வாக்கில் பரவிக் கொண்டிருக்கிறது.
.jpg)
கர்ப்பம் தரித்த பிறகு நான்கு மாதங்கள் கழித்து தான் இந்த விஷயத்தை நடிகரிடம் கூறியிருக்கிறார் அம்மணி. திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் வழக்கு தொடருவேன் என மிரட்டி தனக்கு தெரிந்த சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்களின் துணையோடு தன்னுடைய வழிக்கு அவரை இழுத்து வந்து திருமணமும் செய்து இருக்கிறார் டெய்லர்.
தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்யாத இந்த சமையல் காரர் திடீரென இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருப்பது சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனென்றால் முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது அவரை முறையாக விவாகரத்து செய்யாமல் இன்னொரு பெண்ணை மணப்பது என்பது சட்டப்படி குற்றம் 7 ஆண்டுகள் வரை அதற்கு சிறை தண்டனை இருக்கிறது.
இந்நிலையில், இப்படி பொதுவெளியில் பிரபலமாக இருக்கக்கூடிய ஒரு நபர் சட்டத்திற்கு புறம்பான ஒரு திருமணத்தை செய்வது கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும் இது பலருக்கு தவறான முன் உதாரணமாக அமைந்து விட வாய்ப்பு இருக்கிறது என பலரும் இணைய பக்கங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
English Summary : A famous chef and tailor, linked to Tamil cinema stars, sparked controversy with an illicit affair and marriage. The tailor, after getting pregnant allegedly by deceit, forced the married chef into a second marriage, violating laws. This scandal, involving betrayal and legal issues, has shocked the public.

