கர்ப்பிணி என்றும் பாராமல் கஞ்சா போதையில் சிறுவர்கள் செய்த கொடூரம்! தமிழ்நாட்டில் அரங்கேறிய காது கூசும் அசிங்கம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள வீரவநல்லூர் கிராமத்தில் கஞ்சா போதையில் இருந்த ஒரு கும்பல் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பள்ளி மாணவியை பின்தொடர்ந்தபடி கிராமத்துக்குள் நுழைந்த அந்தக் கும்பல், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீடுகளின் ஜன்னல்கள், கதவுகள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது.

கண்ணில் பட்ட பெண்களை எல்லாம் ஆயுதங்களைக் காட்டி மிரட்டியதால், பல பெண்கள் உயிர் பிழைக்க ஓடியதாக கண்ணீருடன் தெரிவித்தனர்.

ஒரு கர்ப்பிணிப் பெண் சந்து பொந்துகளில் புகுந்து தப்பியதாகவும் கூறினார். இந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் 16 வயது சிறுவன் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர். மேலும் சிலரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. போதைப் பொருள் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பு குறித்த கவலை எழுந்துள்ளது.

 

Summary in English : A group under the influence of ganja entered Veeravannallur village near Tiruttani after following a school girl. They damaged house windows, doors and vehicles including autos with weapons. Women felt threatened and ran to safety. One pregnant woman hid in narrow passages. Police arrested four persons including a 16-year-old boy and are searching for others.