சென்னை: குக் வித் கோமாலி நிகழ்ச்சியில் நடந்த சர்ச்சையில் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் அளித்த போலீஸ் புகாருக்கு மா.க.பா ஆனந்த் தரப்பில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் அளித்த புகாரின் காரணமாக மா.க.பா ஆனந்த் காவல் நிலையத்தின் முன் நின்று பேசியுள்ளார். அவர் கூறியதாவது:

“உங்க குடும்பத்தோடோ, உங்ககூட வந்த பெண்களைப் பற்றியோ யாராவது தவறாகவோ, கிண்டலாகவோ, ஆபாசமாகவோ பேசினா நீங்க என்ன பண்ணுவீங்க? அப்படி கேள்வி கேப்பீங்களா? ஏன் இப்படி பண்றீங்கன்னு கேட்பீங்களா? அப்படித்தான் நானும் ரியாக்ட் செய்தேன். இதை பார்த்த, சேனல் என்ன பண்ணுச்சுன்னா ‘தம்பி நீ வெளியில போயிடு’ன்னு சொல்லிட்டாங்க.”
ஏற்கனவே அவர் ஷோவுக்கு வந்து கொண்டிருந்தார் என்றும், பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார் என்றும் ஆனந்த் தரப்பு தெரிவித்தது.
ஆனால் சமீபத்தில் அவர் பெண்களைப் பற்றியும், குடும்ப உறுப்பினர்களைப் பற்றியும் தவறான, ஆபாசமான கருத்துக்களை பேசியதால் செட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்பட்டது.
மேலும், “அவர் என்னைப் பார்த்து ‘நான் தான் அவரை வேலையை விட்டு தூக்கினேன்’னு நினைச்சிருக்கார். புகழ், வினோத் மீது பொறாமை காரணமாக இந்த அலிகேஷன் வைக்கிறார்.
ஒவ்வொரு 3-6 மாதத்துக்கு ஒரு தடவை இப்படி கண்டென்ட் போட்டு ஃப்ரீயா பப்ளிசிட்டி வாங்குறார்” என்றும் ஆனந்த் தரப்பு குற்றம் சாட்டியது.
தமிழ் புத்தாண்டு அன்று போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், “இந்த மாதிரி கருமம் பிடிச்சவங்க எல்லாம் இப்படி பண்ணினா நம்ம என்கரேஜ் பண்றோம்” என்றும் அவர் கூறினார்.
மது அருந்தி தாக்கியதா?
திவாகர் தரப்பில் “மது அருந்திய நிலையில் தாக்கினார்” என்ற குற்றச்சாட்டுக்கு ஆனந்த் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
“குடித்துவிட்டு நீங்க வேலைக்கு போவீங்களா? மது இருந்துட்டு எப்படி நிப்பீங்க? நான் ஒரு நாள் ஷூட்டிங் என்றால் 18 மணி நேரம் வரை நிற்பேன். குடித்துவிட்டு சென்றால் இவ்வளவு நேரம் நிக்க முடியுமா..?
வேறு ஒருவரின் மனைவி மீது கையைப் போட்டு. செல்லம்.. இவ்வளவு நாள் உங்க வீட்டுக்காரரோட இருந்துட்ட.. ஒரு நாள் என்கூட இருந்து பாரேன்.. என்று கேட்கிறார்.. இது காமெடியா?.. இதை கேட்ட அந்த பெண்ணுக்கு எப்படி இருக்கும்.. நீங்க அந்த இடத்தில் இருந்தால் என்ன பண்ணுவீங்க..? என்று கேள்வி எழுப்பினார்.
ப்ரூஃப் காட்டுங்கள் – நாங்கள் ஒத்துக்கிறோம்
“என்ன நடந்ததுன்னு தீர விசாரிச்சுட்டு பேசுங்கள். வீடியோ ப்ரூஃப் காட்டுங்கள். அப்படி காட்டினா நாங்க ஒத்துக்குறோம், தப்பு பண்ணிட்டோம்னு சொல்றீங்க... இல்லைன்னா இது டார்ச்சர்.
இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வரும் நிலையில், போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. முழு உண்மை வெளியாகும் வரை பார்வையாளர்கள் பொறுமையாக இருக்குமாறு இரு தரப்பும் வேண்டுகோள் விடுத்துள்ளன.
Summary in English : Watermelon Star lodged a police complaint against Ma Ka Pa Anand. Anand explained that the individual was asked to leave the set after making inappropriate comments about women and family members present. He stated that the person had been appearing in shows regularly before this incident. Anand denied the alcohol-related claims and requested full evidence before any conclusions.

