"பிரபல சீரியல் நடிகையின் அந்த உறுப்பின் மீது வாட்டர்மெலான் STAR..?" மா.கா.பா சொன்ன பகீர் பின்னணி!
சென்னை : விஜய் டிவியின் பிரபல காமெடி ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி (Cook with Comali) 7-வது சீசன் படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட மோதல் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. வாட்டர் மெலன் ஸ்டார் என்று அழைக்கப்படும் திவாகர் (பிக் பாஸ் புகழ்), மா.க.பா ஆனந்த், புகழ், கானா வினோத் உள்ளிட்டோர் மீது தாக்குதல், தகாத வார்த்தைகள், மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர், மது போதையில் இருந்த ஆனந்த் தன்னை இரும்பு ராடால் தாக்கியதாகவும், ரத்தக் காயம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இதற்கு மா.க.பா ஆனந்த் தரப்பில் கடும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் நிலையம் முன்பு பேசிய ஆனந்த், “உங்க குடும்பத்தோடோ, உங்ககூட வந்த பெண்களைப் பற்றியோ யாராவது தவறாகவோ, ஆபாசமாகவோ பேசினா நீங்க என்ன பண்ணுவீங்க? அதேபோல நானும் ரியாக்ட் செய்தேன்” என்றார். மேலும், திவாகர் சமீபத்தில் பெண்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களைப் பற்றி தவறான, ஆபாசமான கருத்துகளைப் பேசியதால் செட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக ஆனந்த் தரப்பு தெரிவித்தது. “அவர் என்னைப் பார்த்து ‘நான் தான் அவரை வேல...