பரபரப்பான பொள்ளாச்சி வீடியோ! ஆவேசமான தவெக தலைவர் விஜய்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு வீட்டில் தேர்தல் பிரசாரத்தின்போது ஸ்டிக்கர் ஒட்டும் விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

தமிழக வெற்றி கழகம் (தவெக) சார்பில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த நிலையில், மாற்றுக் கட்சியினர் ஸ்டிக்கர் ஒட்ட வந்தபோது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த வீட்டைச் சேர்ந்த பெண்ணை கட்சியினர் மிரட்டியதாக புகார் எழுந்தது.

பயந்துபோன அந்த பெண், தவெக நிர்வாகிகளிடம் தொடர்புகொண்டு, “எங்களை ரொம்ப மிரட்டுறாங்க... எங்க வீட்ல யாரும் இல்ல... ரொம்ப பயமா இருக்கு” என்று கூறியதை நிர்வாகிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இது தொடர்பாக போலீசில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

வீடியோ வேகமாகப் பரவிய சூழலில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் இந்த சம்பவத்துக்கு வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வாக்காளர்களை மிரட்டும் வகையில் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக திமுகவைச் சுட்டிக்காட்டி, “வாக்காளர்கள் மற்றும் மக்களை மிரட்டும் நடைமுறை மிகவும் கண்டிக்கத்தக்கது. தேர்தல் ஆணையம் இதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், புகார் அளிக்கப்பட்டுள்ளதால் விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் களத்தில் பதற்றம் அதிகரித்துள்ள இந்த சமயத்தில், பொள்ளாச்சி சம்பவம் மற்றும் விஜய்யின் கண்டன அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தேர்தல் ஆணையம் இந்தப் புகாரை தீவிரமாக எடுத்துக்கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary in English : In Pollachi near Coimbatore, a disagreement arose over political stickers pasted on a house during election campaign. A woman from the residence expressed fear after an argument with workers from another party. TVK leaders recorded her statement and shared the video online. TVK chief Vijay issued a statement condemning the incident and urged the Election Commission to ensure voter safety and take necessary action.