பரபரப்பான பொள்ளாச்சி வீடியோ! ஆவேசமான தவெக தலைவர் விஜய்!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு வீட்டில் தேர்தல் பிரசாரத்தின்போது ஸ்டிக்கர் ஒட்டும் விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. தமிழக வெற்றி கழகம் (தவெக) சார்பில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த நிலையில், மாற்றுக் கட்சியினர் ஸ்டிக்கர் ஒட்ட வந்தபோது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த வீட்டைச் சேர்ந்த பெண்ணை கட்சியினர் மிரட்டியதாக புகார் எழுந்தது. பயந்துபோன அந்த பெண், தவெக நிர்வாகிகளிடம் தொடர்புகொண்டு, “எங்களை ரொம்ப மிரட்டுறாங்க... எங்க வீட்ல யாரும் இல்ல... ரொம்ப பயமா இருக்கு” என்று கூறியதை நிர்வாகிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இது தொடர்பாக போலீசில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. வீடியோ வேகமாகப் பரவிய சூழலில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் இந்த சம்பவத்துக்கு வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வாக்காளர்களை மிரட்டும் வகையில் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். குறிப்பாக திமுகவைச் சுட்டிக்காட்டி, “வாக்காளர்கள் மற்றும் மக்களை மிரட்டும் நடைமுறை மிகவும் க...