சென்னை: திரைப்பட நடிகை கௌரி கிஷன், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தனது உடல் எடையை கேட்டதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பாராட்டுகளைப் பெற்ற நிலையில், சமீபத்தில் மாயா கிருஷ்ணன் நடத்தும் யூடியூப் பேட்டியில் அவரிடமே “உன் பாடி கவுண்ட் எத்தனை?” என்று கேட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் 2025-ல் நடைபெற்ற ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ஒரு பத்திரிகையாளர் அந்தப் படத்தின் ஹீரோவிடம் “ஹீரோயின் எவ்வளவு வெயிட்டா இருந்தாங்க?” என்று கேட்டார்.

இதை கேட்டதும் கௌரி கிஷன் கடும் கோபத்துடன் “என்னுடைய உடல் எடையை வைத்து என்னை கிண்டல் செய்கிறீர்களா?” என்று பத்திரிகையாளரை நேரடியாக சாடினார்.
அவரது இந்த துணிச்சலான நடவடிக்கை சக நடிகை-நடிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. “கௌரியின் கோபம் முற்றிலும் நியாயமானது” என்று பெரும்பாலான ரசிகர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
ஆனால், இப்போது அதே கௌரி கிஷன், பிக் பாஸ் பிரபலம் மாயா கிருஷ்ணன் நடத்தும் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், மாயா கிருஷ்ணனிடம் “உன்னுடைய பாடி கவுண்ட் எத்தனை?” என்று கேட்டுள்ளார். இந்தக் கேள்வி “எத்தனை பேருடன் உடலுறவு கொண்டிருக்கிறாய்?” என்பதைக் குறிப்பதாக ரசிகர்கள் புரிந்துகொண்டுள்ளனர்.
இந்த வீடியோ வெளியானதும் ரசிகர்கள் அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளனர். “அன்று உடல் எடையை கேட்டு என்னை புண்படுத்திவிட்டார்கள் என்று ஒப்பாரி வைத்த கௌரி கிஷன், இன்று ஒரு சக நடிகையிடம் ‘நீ எத்தனை பேருடன் உடலுறவு கொண்டிருக்கிறாய்’ என்று கேட்பது மட்டும் நியாயமா?” என்று சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த சர்ச்சை குறித்து கௌரி கிஷன் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. அவர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்த விவகாரம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Summary in English : Gauri Kishan opposed a question on her weight during a film press event and received support from many. Later in an interview she asked another woman about her personal count which led to criticism from viewers for inconsistency.அன்னைக்கு weight கேட்டது தப்பு தான் ஊரே சப்போர்ட் பண்ணுச்சு...
— Nandhan Talkz ✨ (@Nandhan_Talkz) April 21, 2026
இப்போ இந்தம்மாவே முழு பிட்டு கணக்கா பேட்டி குடுத்து வச்சுருக்கு...
அப்போ இது என்ன மனநிலை ??? pic.twitter.com/FRbNOJ6coV

