Posts

Showing posts with the label support

மாமியாரை வீட்டை விட்டு துரத்திய மருமகள்! கோடீஸ்வரியாக திரும்பி வந்த மாமியார் செய்த காரியத்தை பாருங்க!

Image
மருமகளால் வீட்டை விட்டு துரத்தப்பட்ட மாமியார் கோடீஸ்வரியாக திரும்பி வந்த போது செய்த காரியத்தை பற்றி இந்த கதையில் பார்க்கலாம். அத்தியாயம் 1: இல்லத்தின் ஒளிமதுரை அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில், ராஜேந்திரன் எனும் இளைஞன் தன் மனைவி லக்ஷ்மியுடனும், தாய் பார்வதியுடனும் வாழ்ந்து வந்தான். பார்வதி அம்மாள், அறுபது வயதைத் தொட்டாலும், வீட்டின் அத்தனை பொறுப்பையும் தன் தோளில் சுமந்து கொண்டிருந்தாள். காலையில் எழுந்ததும் கோயிலுக்கு போய், பின்னர் சமையல், தோட்ட வேலை, பசு மாடுகளைப் பராமரித்தல் என்று ஓய்வில்லாத வாழ்க்கை. ராஜேந்திரன் ஒரு சிறிய தனியார் நிறுவனத்தில் கணக்கு வேலை பார்த்தான். லக்ஷ்மி, நகரத்து பெண். அவளுக்கு கிராம வாழ்க்கையும், மாமியாரின் பழைய பாணி பிடிக்கவில்லை. “லக்ஷ்மி, நீ எதுக்கு கஷ்டப்படுற.. நீ ரெஸ்ட் எடு.. நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொல்லும் பார்வதியின் பாசத்தை, லக்ஷ்மி தன் மீது ஆதிக்கம் செலுத்தும் சதியாகப் பார்த்தாள். நாட்கள் செல்ல செல்ல, லக்ஷ்மியின் பொறாமை அதிகரித்தது. மாமியார் பார்வதி தன் மகனுக்கு சிறு சிறு உதவிகள் செய்வதை, “என் கணவனை என்னிடமிருந்து பிரிக்கிறாள்” என்று நினைத்தாள்...

அதிகரிக்கும் குரூப் உடலுறவு! வயதானவர்களை தேடும் இளம்பெண்கள்! வெளிவராத பகீர் ரகசியம்!

Image
சென்னை : தனியார் டிடெக்டிவ் துறையில் பணியாற்றும் பெண் டிடெக்டிவ் வினோதினி, தான் சந்தித்த விசித்திரமான வழக்குகள் குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். பெண்கள் பொதுவாக ஈடுபட விரும்பாத இந்தத் துறையில் தான் ஏன் இன்னும் தொடர்கிறேன் என்பதை விளக்கிய அவர், “இது எனக்கு வேலை அல்ல… என் பொழுதுபோக்கு, என் விளையாட்டு” என்று உணர்ச்சிபூர்வமாக கூறினார். குழந்தைப் பருவத்திலிருந்தே தெரியாத விஷயங்களுக்கு விடை கண்டுபிடிப்பது தனக்கு பெரும் சுவாரசியம் அளிப்பதாகவும், இதை ஒரு வேலையாகவே உணர்ந்ததில்லை என்றும் வினோதினி தெரிவித்தார். “பெண்கள் இந்தத் துறையில் வருவது அரிது. ஆனால் எனக்கு இது முழு விருப்பத்தின் பேரில் செய்யும் விஷயம்” என்றார். இந்த நேர்காணலில் அவர் பகிர்ந்த மிகப் பெரிய விசித்திர வழக்கு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒரு நாள் தம்பதியர் ஒருவர் அவரைத் தொடர்புகொண்டனர். தங்களது மகளின் நடவடிக்கையில் திடீர் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், அவள் வீட்டில் யாருடனும் பேசாமல் அமைதியாக இருப்பதாகவும் கூறினர். ஆனால் அவள் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்தவை – ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் விலை க...

உடலுறவு பற்றி கண்றாவி பேச்சு! உடல் எடை பற்றி கேட்டு காயப்படுத்திட்டாங்கோ” என ஒப்பாரி வச்ச கௌரி கிஷனா இது?

Image
சென்னை: திரைப்பட நடிகை கௌரி கிஷன், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தனது உடல் எடையை கேட்டதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பாராட்டுகளைப் பெற்ற நிலையில், சமீபத்தில் மாயா கிருஷ்ணன் நடத்தும் யூடியூப் பேட்டியில் அவரிடமே “உன் பாடி கவுண்ட் எத்தனை?” என்று கேட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 2025-ல் நடைபெற்ற ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ஒரு பத்திரிகையாளர் அந்தப் படத்தின் ஹீரோவிடம் “ஹீரோயின் எவ்வளவு வெயிட்டா இருந்தாங்க?” என்று கேட்டார்.  இதை கேட்டதும் கௌரி கிஷன் கடும் கோபத்துடன் “என்னுடைய உடல் எடையை வைத்து என்னை கிண்டல் செய்கிறீர்களா?” என்று பத்திரிகையாளரை நேரடியாக சாடினார்.  அவரது இந்த துணிச்சலான நடவடிக்கை சக நடிகை-நடிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. “கௌரியின் கோபம் முற்றிலும் நியாயமானது” என்று பெரும்பாலான ரசிகர்களும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், இப்போது அதே கௌரி கிஷன், பிக் பாஸ் பிரபலம் மாயா கிருஷ்ணன் நடத்தும் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், மாயா கிருஷ்ணனிடம் “உன்னுடைய பாடி கவுண்ட் எத்தனை?” என்று கேட்டுள்ளார். இந்தக் ...

சங்கீதா எனக்கு மகள் மாதிரி! விஜய் கிட்ட இதை மட்டும் பண்ண சொல்லுங்க! SAC கூறிய தகவல்!

Image
நடிகர் தளபதி விஜய்யின் தந்தையும், புகழ்பெற்ற இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் (S.A. Chandrasekhar) அவர்கள், நடிகை வனிதா விஜயகுமார் நடத்தும் தனியார் யூடியூப் சேனலில் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், தனது மகன் விஜய் மீதான அளவுகடந்த அன்பு, பாசம், அவரை வளர்த்த விதம், சினிமா பயணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இந்த பேட்டி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜய் மீதான அளவில்லா பாசம் பேட்டியில் எஸ்.ஏ.சி., "நான் விஜயை எப்போதும் விட்டுக்கொடுத்தது இல்லை. அவனை நான் ரொம்ப நேசிச்சேன். குழந்தைப் பருவத்தில் ஹோம்வொர்க் செய்யாவிட்டால் ஸ்கேல் வைத்து அடித்தது உட்பட சில தவறுகள் நடந்திருக்கலாம். ஆனால், அது என் அன்பின் வெளிப்பாடு தான். இன்றும் என் கண்ணுக்குஅவன் 5-6 வயது மகனாகவே தெரிகிறான்" என்று உணர்ச்சிபூர்வமாகக் கூறினார். மேலும், "ஆம்பளைப் பிள்ளைகளுக்கு அம்மாவை ரொம்ப பிடிக்கும் என்று சொல்வார்கள். ஆனால் விஜய்க்கு நான் தான் ரொம்ப பிடிக்கும். நாங்கள் இருவரும் அதிகம் பேசிக்க மாட்டோம், ஆனால் ஒருவருக்கொருவர் மீதான அன்பு ஆழமானது" என்றும் தெரிவித்தார்...

கரூர் சம்பவம் : மௌனம் கலைத்தார் ஆதவ் அர்ஜுனா!

Image
கரூர், செப்டம்பர் 29 : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக்) தேர்தல் மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்த 40-க்கும் மேற்பட்டோரின் துயரத்தை வெளிப்படுத்தி, நள்ளிரவில் தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் மௌனத்தைக் கலைத்துள்ளார். "என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தைக் கடந்த 24 மணிநேரமாக அனுபவித்து வருகிறேன்" என்று தனது பதிவில் அவர் கூறியுள்ளார். செப்டம்பர் 27 அன்று கரூர் நகரில் தவெக் தலைவர் நடிகர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 முதல் 41 பேருக்கும் மேல் உயிரிழந்தது தமிழக அரசியல் களத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. விபத்தில் காயமடைந்த சிலர் இன்றும் தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனிப்பட்ட மருத்துவமனைகளை நேரில் சந்தித்து உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். தவெக் தலைவர் விஜய், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஒவ்வொருவருக்கும் 20 லட்சம் ரூபாய் இழப்பீட்டையும் அறிவித்துள்ளார். இந்நிலையில், விபத்து நிகழ்ந்து 24 மணி நேரம் கழித்து, அதிகாலையில் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ...

‘என் புருஷன்.. வேற பொண்ணு கூட.. நேர்ல பாத்துட்டேன்..’ அந்த நேரத்தில் இது நடந்துச்சு.. பிக்பாஸ் சம்யுக்தா பகீர்..

Image
பிரபல நடிகையும் தொலைக்காட்சி பிரபலமுமான சம்யுக்தா சண்முகம், தனது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட புயலைப் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். தனது கணவர் வேறொரு பெண்ணுடன் உறவில் இருப்பதாக வந்த தகவல்கள், கொரோனா காலத்தில் நேரில் உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த அதிர்ச்சிகரமான தருணம் குறித்து அவர் பகிர்ந்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. சம்யுக்தா தனது பேட்டியில் கூறியதாவது, "எனது கணவர் வேறொரு பெண்ணுடன் உறவில் இருப்பதாக தகவல்கள் வந்தன. ஆனால், அதை நான் நேரில் பார்க்கவில்லை. கொரோனா காலத்தில் அந்த உண்மையை நேரில் பார்த்தபோது, அந்தப் பெண்ணுடன் தான் என் கணவர் தொடர்பில் இருக்கிறார் என்பது தெரியவந்தது. அந்த நேரத்தில் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. யாரிடம் சொல்வது, புகார் கொடுப்பதா, வேண்டாமா என்று தவித்தேன். திசையற்று, குழப்பத்தில் நின்றேன். "இந்த கடினமான தருணத்தில், அவருக்கு ஆறுதலாக அமைந்தவர் அவரது தோழி பாவனா. "பாவனாவுடன் அவ்வளவு நெருக்கமான பழக்கம் இல்லை என்றாலும், அந்த நேரத்தில் யாரிடம் பேசுவது என்று தெர...

குலைநடுங்குது.. தீராத விளையாட்டு பிள்ளை நடிகை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ.. பற்றி எரியும் திரையுலகம்..

Image
மும்பை: இந்தியாவில் #MeToo இயக்கத்தை தொடங்கிய பாலிவுட் நடிகை தனுஷ்ரீ தத்தா, தனது வீட்டில் தொடர்ந்து தொந்தரவுக்கு ஆளாவதாகவும், இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் ஒரு அதிர்ச்சி வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தனுஷ்ரீ தத்தாவின் புகார் 2008ஆம் ஆண்டு ‘Horn Ok Pleassss’ படப்பிடிப்பின் போது மூத்த நடிகர் நானா படேகர் தன்னை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கியதாக குற்றம்சாட்டியதன் மூலம், இந்தியாவில் #MeToo இயக்கத்தை தொடங்கியவர் தனுஷ்ரீ தத்தா. இந்நிலையில், தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் என் சொந்த வீட்டில் தொந்தரவுக்கு ஆளாகிறேன். கடந்த 4-5 ஆண்டுகளாக என்னை பயங்கரமாக தொந்தரவு செய்கிறார்கள். என் உடல்நலம் மோசமாகி விட்டது. வேலை செய்ய முடியவில்லை. View this post on Instagram A post shared by Tanushree Dutta Miss India Universe (@iamtanushreeduttaofficial) என் வீடு குப்பையாகி விட்டது. வீட்டு வேலைக்காரர்கள் என் பொருட்களை திருடி விட்டனர். எல்லா வேலைகளையும் நானே செய்ய வேண்டியுள...