திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகிலுள்ள பாதிரிவீடு கிராமம். இந்த சிறிய கிராமத்தின் அமைதியை உலுக்கிய கொடூரமான கொலைச் சம்பவம் ஒன்று பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் அவர் காலையில் வீட்டை விட்டுச் சென்றால், இரவு 1 மணிக்கு மேல் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் 2 மணிக்கு மேல்தான் வீடு திரும்புவார்.

வருமானப் பற்றாக்குறையால் புவனேஸ்வரியும் வேலைக்குச் செல்லத் தொடங்கினார். கிராமத்தின் தரிக்கூடத்துக்கு (பவர் லூம்) வேலைக்குச் சென்ற அவர், அங்கு முதலாளியான முத்தும் ஜெயத்துடன் (முத்துஜெயம்) நெருக்கமான உறவில் ஈடுபட்டார்.
வேலை முடிந்த பிறகு தரிக்கூடத்தில் இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவிக்கத் தொடங்கினர். இதனால் புவனேஸ்வரி இரவு தாமதமாக வீடு திரும்பும் நிலை உருவானது.

கணவர் பாலசுப்பிரமணிக்கு மனைவியின் தாமதம் சந்தேகத்தை ஏற்படுத்தியது. உறவினர்கள் மூலம் ரகசியமாக கண்காணித்த அவர், மனைவியின் கள்ளக்காதலை அறிந்தார்.
கண்டித்து, வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று தடுத்தார். புவனேஸ்வரி சிறிது காலம் வீட்டிலேயே இருந்தார். ஆனால், முத்துஜெயம் அவருக்கு ரகசியமாக ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்து தொடர்பைத் தொடர்ந்தார்.
ஒரு கட்டத்தில் முத்துஜெயம், “100 நாள் வேலைக்குச் செல்வதாகக் கூறி வெளியே வா, நான் பிக்-அப் செய்கிறேன்” என்று திட்டம் தீட்டினார். புவனேஸ்வரியும் கணவரிடம் பொய் சொல்லி 100 நாள் வேலைக்குச் செல்வதாகக் கூறி, கள்ளக்காதலனைச் சந்தித்து உறவைத் தொடர்ந்தார்.

இந்த உறவு நீண்ட காலம் தொடர முடியாது என்பதை உணர்ந்த புவனேஸ்வரி, தன் கணவரை அகற்றிவிட்டால் மட்டுமே தடையின்றி உல்லாசம் அனுபவிக்கலாம் என்ற கொடூரமான எண்ணத்துக்கு வந்தார். முத்துஜெயமும் அதற்கு சம்மதித்தார்.
கொலைத் திட்டம்
கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களான ஹேமந்த் (22), இன்பராஜ் (22), சுரேந்தர் (22) ஆகியோரைப் பணத்தாசை காட்டி கூட்டாளிகளாகச் சேர்த்தனர். பாலசுப்பிரமணி இரவு வீடு திரும்பும் நேரத்தைத் தேர்வு செய்து, இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அவரைத் தாக்கத் திட்டமிட்டனர்.

வழக்கம் போல் டெல்லி பிரசாத்தை வீட்டில் விட்டுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த பாலசுப்பிரமணியை, முத்துஜெயம் மற்றும் மூன்று இளைஞர்கள் சேர்ந்து தலை, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். பின்னர் அருகில் உள்ள சின்னேரி குளம் ஏரியின் ஒதுக்குப்புறத்தில் குழி தோண்டி உடலைப் புதைத்துவிட்டு தப்பினர்.
கொலை வெளியானது
அன்று இரவு பாலசுப்பிரமணி வீடு திரும்பாததால் புவனேஸ்வரி உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். உறவினர்கள் தேடியபோது வீட்டருகே இரத்தக்கறை படிந்த ஹெல்மெட் மற்றும் டிபன் பாக்ஸ் கிடைத்தன.

இரத்தக்கறையைப் பின்தொடர்ந்து சென்றவர்கள் ஏரிக்கரையில் புதிதாகத் தோண்டப்பட்ட குழியைக் கண்டுபிடித்தனர். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் வருவாய்த் துறை அதிகாரிகளுடன் குழியைத் தோண்டி, கைகள் உடைக்கப்பட்டு, உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் பாலசுப்பிரமணியின் சடலத்தை மீட்டனர். பிரேதப் பரிசோதனைக்குப் பின் வழக்கை கொலை வழக்காக மாற்றினர்.
போலீஸ் விசாரணை
தீவிர விசாரணையில் புவனேஸ்வரியின் மீது சந்தேகம் எழுந்தது. அவரிடம் நடத்திய கடும் விசாரணையில் ரகசிய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த போனில் முத்துஜெயத்துடன் இருந்த தொடர்பு வெளியானது. தொடர்ந்த விசாரணையில் கள்ளக்காதல், கொலைத் திட்டம், கூலிப்படை என அனைத்தும் துல்லியமாக வெளியாயின.

இறுதியில் புவனேஸ்வரி, முத்துஜெயம், ஹேமந்த், இன்பராஜ், சுரேந்தர் ஆகிய ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ஊர் மக்கள் இந்தச் சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்தனர். “கணவனுக்கு இடையூறாக இருந்ததால் கொலை” என்ற கொடூரமான காரணம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Summary in English : In a village near Kummidipoondi, Buwaneshwari, 38, developed a close relationship with her employer Muthum Jayam while working at a power loom unit. Her husband Balasubramani, 43, a driver, was often away at night. To continue the relationship without interference, she and her associate planned his removal. They involved local youths and carried out the act near a lake. Police later arrested all involved after investigation.