12th படிக்கும் போதே அது நடந்துடுச்சு.. இதை சொல்ல கூச்சப்படல.. நடிகை மஹிமா நம்பியார்..!

12th படிக்கும் போதே அது நடந்துடுச்சு.. இதை சொல்ல கூச்சப்படல.. நடிகை மஹிமா நம்பியார்..!

கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் மஹிமா நம்பியார். இவர் ஒரு பாடகி, முறைப்படி பரதக்கலை பயின்ற சிறந்த நடனக் கலைஞர்.

மலையாளத்தில் தனது 15வது வயதில், நடிகர் திலீப்பின் சகோதரியாக காரியஸ்தன் என்ற படத்தில், மஹிமா நடித்தார். தொடர்ந்து மாடலிங் துறையிலும் அவர் ஆர்வம் காட்டினார்.

கடந்த 2012ம் ஆண்டில் வெளிவந்த சாட்டை படத்தில், மஹிமா நம்பியார் நடித்து அறிமுகமானார். இதில் அறிவழகி என்ற பள்ளி மாணவியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை தன் அழகால், நடிப்பால் மஹிமா கவர்ந்தார்.

எனினும் அதன்பிறகு பள்ளி படிப்புக்காக சினிமாவுக்கு ஓராண்டு இடைவெளி விட்ட மஹிமா நம்பியார் என்னமோ நடக்குது, மொசக்குட்டி, அகத்திணை போன்ற படங்களில் நடித்தார்.

--Advertisement--

அதன்பிறகு குற்றம் 23 படத்தில் மஹிமா நம்பியார் வசீகரமான அழகு ரசிகர்களை வசப்படுத்தியது. தொடர்ந்து புரியாத புதிர், அண்ணாதுரை, கொடி வீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜே போன்ற படங்களில் நடித்தார்.

மஹிமா நம்பியார்

மஹிமா நம்பியார், தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார். கடந்தாண்டில் வெளியான சந்திரமுகி 2, ரத்தம், 800, நாடு உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருந்தார். இதில் நாடு படம் சிறந்த படைப்பாக பேசப்பட்டது.

திறமை, அழகு, நடனம், பாட்டு என பன்முக திறமை கொண்ட நடிகையாக இருந்த போதிலம், மஹிமா நம்பியார் இன்னும் வளரும் ஒரு கலைஞராகவே இன்னும் இருக்கிறார்.

மலையாளத்திலும் வளட்டி, ஆர்டிஎக்ஸ் ராபர் டோனி ஷேவியர் என தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

கூச்சப்படல

மஹிமா நம்பியார் அவர் நடிக்கும் படங்களுக்காக அவ்வப்போது நேர்காணலில் பங்கேற்று பேசுகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற அவர் சில விஷயங்களை மனம் திறந்து ரசிகர்களுடன் பகிர்ந்துக்கொண்டார்.

நான் 12 ஆம் வகுப்பு படிக்கும் போது, தமிழில் சாட்டை என்ற படத்தில் நடித்தேன். அப்போது எனக்கு தமிழ் பேசத் தெரியாது.

ஆனால், என்னுடன் நடித்தவர்கள் எனக்கு தமிழ் பேச கற்றுக் கொடுத்தனர் இதனை சொல்வதற்கு நான் கூச்சப்படவில்லை.

ஆனால் சாட்டை படத்தின் படப்பிடிப்பு முடிவதற்குள், நான் ஓரளவுக்கு தமிழ் பேச கற்றுக் கொண்டேன் என வெளிப்படையாகக் கூறியுள்ளார் மஹிமா நம்பியார்.

நான் 12ம் வகுப்பு படிக்கும்போதே தமிழ் பேச கத்துக்கிட்டேன். அப்போதே அது நடந்துடுச்சு. அதைச்சொல்ல கூச்சப்படல என மஹிமா நம்பியார் கூறியிருப்பது, அவரது கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.