நீங்க என்ன மதம் என்றே தெரியல.. நயன்தாரா வந்த இடியாப்ப சிக்கல்..! அட கொடுமைய..!

எதற்கு எதற்கெல்லாம் மதத்தை பேசுவது என்று தெரியாமல் இன்று நயன்தாரா விஷயத்தில் மதத்தை முடுச்சு போட்டு பேசி இடியாப்ப சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த சில நடிகர் நடிகைகளுக்கு மட்டும் அல்லாமல் தமிழில் நடித்து இருக்கும் சில நடிகர் மற்றும் நடிகைகளுக்கு துபாயில் அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக கோல்டன் விசாக்களை வழங்கி இருப்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

கோல்டன் விசா

ஆனாலும் கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நயன்தாராவிற்கு துபாயின் சிறப்பு மிக்க கோல்டன் விசா கிடைக்கவில்லை. இதற்கு என்ன காரணம் தெரியுமா? பல முறை துபாய்க்கு தன் காதல் கணவரோடு அடிக்கடி சென்று வரும் நயந்தாராவிற்கு துபாய் அரசாங்கம் ஏன் இன்னும் கோல்டன் விசாவை தர மறுக்கிறது என்பதற்கான காரணத்தை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தென்னிந்திய திரைப்படங்களில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்துக் கொண்டு லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா 2003 ஆம் ஆண்டு வெளி வந்த மனசினகாரே என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

--Advertisement--

இதனை அடுத்து சரக்குமாரோடு ஜோடியாக 2005 ஆம் ஆண்டு வெளி வந்த ஐயா திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமானார். இதனை அடுத்து வெற்றி படங்களை கொடுத்த நயன்தாரா தமிழில் முன்னணி நடிகையாக மாறிவிட்டார்.

நெடுநாட்கள் காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு வாடகை தாயின் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் இவர் திருமணம் செய்து கொண்டதை அடுத்து பலவிதமான சர்ச்சைகள் ஏற்பட்டது.

அண்மையில் இவர் நடிப்பில் வெளி வந்த அன்னபூரணி திரைப்படத்திலும் மத சிக்கல் ஏற்பட்டு ஓடிடி தளத்தில் இருந்து அன்னபூரணி படம் நீக்கப்பட்டது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

நயன்தாரா என்ன மதம்..?

நயன்தாரா இந்து மதத்தைச் சார்ந்தவரல்ல. பிறப்பால் கிறிஸ்துவராக விளங்கக்கூடிய நயன்தாரா தற்போது திருமணம் செய்து கொண்டிருப்பது ஒரு இந்துவை தான். எனினும் இவர் பெரிதாக கிறிஸ்துவ சமயத்தை கடைப்பிடித்து இருக்கிறாரா? என்பதை பற்றி நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.

கிறிஸ்துவரான நயன்தாரா அடிக்கடி இந்து கோயில்களுக்கு சென்று வருவது அனைவரும் அறிந்த விஷயம் தான். இதனை அடுத்து கிறிஸ்துவரான இவர் இந்து கோயிலுக்கு சென்று வருவதின் காரணத்தால் தான் இவருக்கு கோல்டன் விசா வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு இருப்பதாக பகீர் செய்திகள் கசிந்துள்ளது.

கோல்டன் விசாவை வைத்திருப்பார்கள் 10 ஆண்டுகள் வரை விசா இல்லாமலேயே அந்த ஊரிலேயே வசிக்கலாம். மேலும் அங்கே செல்ல இவர்கள் விசா எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இது தான் கோல்டன் விசாவின் சிறப்பு. மேலும் தமிழ் நடிகரான பார்த்திபன் கூட இந்த விசாவை பெற்றிருக்கிறார்.

சமந்தா, அமலாபால், மோகன்லால், மம்முட்டி போன்றவர்கள் இந்த கோல்டன் விசாவை பெற்றிருக்கிறார்கள். துபாயில் தொழிலை நிறுவ ஆசை படக்கூடிய நயந்தாராவிற்கு இது வரைக்கும் ஐக்கிய அரபு எமிரைட் அரசு கோல்டன் விசா வழங்கவில்லை.

இதனை அடுத்து மன வேதனையில் இருக்கக்கூடிய நயன்தாரா தன்னைவிட சிறிய நடிகைகளுக்கு எல்லாம் இந்த விசா கிடைத்துள்ளது துபாயில் தொழில் தொடங்க நினைக்கும் எனக்கு மட்டும் இன்னும் ஏன் கிடைக்கவில்லை என தனது கணவரிடம் சொல்லி வருத்தப்பட்டு இருக்கிறார்.

இதற்கு என்ன காரணம் என்ன பரபரப்பான கருத்தை பயில்வான் அவர்கள் தெரிவித்திருக்கிறார். கிறிஸ்துவரான நயன்தாரா தற்போது இந்தியாவில் இருக்கும் இந்து கோயில் முழுவதும் யாத்திரை சென்று கடவுளை தரிசனம் இருக்கிறார்.

இதனை அடுத்து ஐக்கிய அரபு எமரைட் அரசனது நயன்தாரா எந்த மதத்தைச் சார்ந்தவர் இந்து மதத்தைச் சார்ந்தவரா? இல்லை கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவரா? என்பதில் ஒரு கடுமையான குழப்பத்தில் இருக்கிறார்கள்.

இந்த காரணத்தால் தான் இவருக்கு கோல்டன் விசா மறுக்கப்பட்டு வருவதாக சில தகவல்கள் வந்திருப்பதாக பயில்வான் கூறினார். இதனை அடுத்து அடக்.. கொடுமையே.. இது தான் அந்த இடியாப்பச் சிக்கலா? என ரசிகர்கள் அனைவரும் பேசி வருகிறார்கள்.