ஸ்டம்பை பிடிங்கி எறிந்த உமேஷ் யாதவ்..இப்படி ஒரு ஆக்ரோஷமான..??

ஸ்டம்பை பிடிங்கி எறிந்த உமேஷ் யாதவ்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் டிராபியின் மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் நாள் சுழற்பந்து வீச்சாளர்களின் கை ஓங்கி இருந்தது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இந்த ஆடுகளத்தில் ஆரம்பம் முதலே சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இந்தூரின் ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்தது, முதல் நாளில் மொத்தமாக விழுந்த 14 விக்கெட்டுகளில் சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டும் 13 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்,மற்றும் 1 ரன் அவுட் எடுத்துள்ளனர்.

இந்தூரில் கவாஜா 60 ரன்கள் எடுத்த நிலையில், இந்தூர் ஆடுகளத்தில் இந்திய ஜாம்பவான்களால் நிலைத்து நிற்க முடியவில்லை. மறுபுறம், ஆஸ்திரேலிய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா இந்த ஆடுகளத்தில் விளையாடும் போது அதிகபட்சமாக 60 ரன்கள் எடுத்தார். ஆனால், தேவையில்லாத ஸ்வீப் ஷாட்டை ஆடி ரவீந்திர ஜடேஜாவிடம் பலியாகி விக்கெட்டை இழந்தார்.

இரண்டாவது நாளாக ஆட்டம் நடக்கிறது. இரண்டாவது நாளின் முதல் செஷனில், டீம் இந்தியா தனது பதிலடியை கொடுத்து விட்டது இதனால் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது. முதல் நாளில் இந்திய பந்துவீச்சாளர்கள் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இரண்டாவது நாளில் இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

உமேஷ் யாதவ் கேமரூன் கிரீன், மிட்செல் ஸ்டார்க் மற்றும் டாட் மர்பியை வேட்டையாடினார். மிட்செல் ஸ்டார்க் கிளீன் பவுல்டு ஆக்கி தனது ஆக்ரோஷமான பவுலிங் திறனை வெளிப்படுத்தினர். 74வது ஓவரின் மூன்றாவது பந்தில் ஸ்டார்க்கிற்கு டிரெஸ்ஸிங் ரூம்க்கு வழி காட்டினார் உமேஷ்.

இந்தியா vs ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட் , முதல் நாளில் 109 ரன்களுக்கு டீம் இந்தியா ஆல் அவுட் ஆனது. பதிலுக்கு ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 197 ரன்கள் எடுத்து 88 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணி சார்பில் முதல் இன்னிங்சில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும்,ரவிச்சந்திரன் அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

   

--Advertisement--