லொஸ்லியா அப்பா-வோட அட்ரஸ் மட்டும் கிடைச்சா - மொதல்ல இதை தான் பண்ணுவேன் - கிழி கிழி கலா மாஸ்டர்..!


பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி பரபரப்பாக சென்றுகொண்டிருகின்றது. இரண்டாவது சீசனை போல சலிப்பு தட்டாமல் காதல், கலவரம், கலாச்சாரம் என விருவிருப்பாக போட்டியை நடித்தி வருகிறார்கள். 

அதற்கேற்றால் போல போட்டியாளர்களும் ஒத்துழைப்பு தருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளரும் தன்னுடைய சிஷ்யனுமான சாண்டி குறித்து கிழி கிழி என்ற வசனத்தின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான கலா மாஸ்டர் பிரபல வலைத்தளம் ஒன்றில் கூறியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வதற்கு முன்பு கமலிடம் "நான் இந்த அளவுக்கு வந்ததுக்கு காரணம் கலா அக்கா தான் என்று கூறினான்". அவன் வந்த வழியை மறக்காமல் இருக்கிறான். அவகிட்ட இருக்க ஒரே பிரச்னை லொட லொட-வென கிண்டல் அடித்துகொண்டே இருப்பான் என்னுடன் 15 வருஷமாக பயணித்து வரும் பையன் அவன்.

அப்புறம், இலங்கை தமிழர்களுக்கு எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு, கனடாவில் நடன பள்ளி வைத்திருக்கிறேன். அங்கு வரும் இலங்கை தமிழர் என்னிடம் காட்டும் அன்பிற்கு ஈடே கிடையாது.
Share it with your Friends