பீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள் - அப்போ இதை தவறாமல் படிங்க..! இது உங்களுக்கு தான்.!


ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் பெரும்பாலான இளைஞர்கள் தேடி செல்வது பீரைதான். பீரை இளைஞர்களின் தேசிய பானம் என்று அறிவித்து விடும் அளவிற்கு நாளுக்கு நாள் பீர் விற்பனை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக இந்தியாவில் 22 சதவீத இளைஞர்கள் தொடர்ச்சியாக பீர் அருந்துவதை பழக்கமாக கொண்டுள்ளனர்.

அதிர்ச்சியளிக்கும் வகையில் 18 வயதிற்கு உட்பட்ட பீர் குடிக்கும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பொதுவாக பீர் குடிப்பவர்கள் சொல்லும் ஒரு கருத்து பீர் குடித்தால் உடல் வலிமை அதிகரிக்கும் மேலும் இதனால் எந்த பக்க விளைவுகளும் இல்லை என்பதுதான். ஆனால் உண்மையில் பீர் குடிப்பதில் சில சிக்கல்கள் இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. இந்த பதிவில் பீர் குடிப்பதால் ஏற்படக்கூடிய ஆபத்தான பக்கவிளைவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

இரத்த சர்க்கரை அளவில் குறுக்கீடு


பீர் குடிப்பது உண்மையில் உங்கள் உடலின் இரத்த சர்க்கரை அளவில் தலையிடக்கூடும். கல்லீரல் அதில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கிளைகோஜனை குளுக்கோஸாக மாற்றி இரத்த ஓட்டத்தில் வெளியிடுகிறது. பீரில் உள்ள ஆல்கஹால் உண்மையில் இந்த செயல்முறையில் தலையிடுகிறது. இது பசி வேதனையை உருவாக்கக்கூடும், மேலும் அதிக உணவை உட்கொள்ள வழிவகுக்கும். இது எடை அதிகரிப்பிற்கு வழி வகுக்கும். பீர் குடிப்பதற்கு முன் சரியான உணவை உட்கொள்வதன் மூலம் இதை எதிர்கொள்ள முடியும்.

அதிக கலோரிகள்


வணிக நிறுவனங்கள் கூறுவது போல பீரில் அதிகளவு சத்துக்கள் எதுவும் இல்லை மாறாக அவற்றில் அதிகளவு கலோரிகளே உள்ளது. எடையை குறைக்க விரும்புபவர்கள் பீர் குடிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இது உங்கள் உடல் சாதாரணமாக செய்வதை விட குறைவான கலோரிகளை எரிக்க வைக்கிறது. பீரில் உள்ள ஆல்கஹால் கல்லீரலால் அசிடேட் ஆக மாற்றப்படுகிறது. உடல் பின்னர் அசிட்டேட்டை ஆற்றலுக்காக எரிக்கிறது மற்றும் அதிகப்படியான கொழுப்பு இடுப்பு மற்றும் தொப்பை போன்ற பகுதிகளில் சேமிக்கப்படுகிறது.

 

டையூரிடிக் ஆக வேலை செய்கிறது


சோர்வான நாளாக இருக்கும்போது ஜில்லென்று ஒரு பீர் குடிப்பது சிறந்த நிவாரணமாக இருக்கும். இயற்கை ஆண்டிடரூடிக் ஹார்மோன்கள் உடலை திரவத்தைத் தக்கவைக்க உதவுகின்றன, மேலும் இந்த ஹார்மோனின் வெளியீட்டை பீர் குறைக்கிறது. இதன் விளைவாக, நீங்கள் ஒரு சில கிளாஸ் பீர் குடிக்கும்போது சிறுநீர் கழிப்பதற்கான அதிக வேட்கையை நீங்கள் உணரலாம். குறிப்பாக விளையாட்டு வீரர்களுக்கு இது அதிக தீங்குவிளைவிக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில் சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் நீர்ச்சத்தை இழக்கிறீர்கள்.

 

க்ளட்டன் உணர்திறன்


சந்தையில் காணப்படும் பெரும்பாலான பீர் வகைகளில் மால்ட் பார்லி உள்ளது. பார்லியில் க்ளட்டன் வகை புரதம் உள்ளது. சிலருக்கு க்ளட்டன் சென்சிட்டிவிட்டி இருக்கும். உங்களுக்கு இந்த குறைபாடு இருந்தால் இந்த சேர்மம் இல்லாத பீர்களை தேர்ந்தெடுக்கவும்.

 

மோசமான இதய ஆரோக்கியம்


சில ஆய்வுகளின் படி பீர் குடிப்பது உங்களின் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறப்படுகிறது. ஆனால் அது குறிப்பிட்ட அளவில் குடிக்கும் போது மட்டுமே. ஏற்கனவே இதய நோய் இருப்பவர்கள் பீர் குடிப்பது அவர்களுக்கு எந்த பயனையும் தராது. சொல்லப்போனால் இது அவர்களின் இதய ஆரோக்கியத்தை மேலும் மோசமாக்கும்.

 

இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்


நீங்கள் ஒரு நாளைக்கு பல கிளாஸ் பீர் எடுத்துக் கொண்டால், அது இரத்த அழுத்த அளவை அதிகரிக்க வழிவகுக்கும். எனவே, உங்கள் இரத்த அழுத்த அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் பீர் மட்டும் குடிக்கவும்.

 

நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்


பீர் இரைப்பை அமிலத்துடன் செயல்படும் சில தூண்டுதல்களைக் கொண்டுள்ளது, இது இரைப்பை ஓசோஃபேஜியல் ரிஃப்ளக்ஸ் தொடங்குவதற்கு வழிவகுக்கும் மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.

 

பீர் தொப்பை


உங்களின் ஒல்லியான தோற்றத்தைப் பற்றி நீங்கள் பெருமையாக நினைத்தால் நீங்கள் பீர் குடிப்பதை அறவே தவிர்ப்பது நல்லது. குறைந்தபட்சம் அளவை குறைத்துக் கொள்வதாவது நல்லது. பீர் குடிப்பதால் உங்களுக்கு தொப்பை போடும் வரும் வாய்ப்புகள் மிக அதிகம். மறந்து விடாதீர்கள் பீர் குடிப்பதால் ஏற்படும் தொப்பையை குறைப்பது மிகவும் கடினம்.

பீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள் - அப்போ இதை தவறாமல் படிங்க..! இது உங்களுக்கு தான்.! பீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள் - அப்போ இதை தவறாமல் படிங்க..! இது உங்களுக்கு தான்.! Reviewed by Tamizhakam on February 10, 2020 Rating: 5
Powered by Blogger.