ஒரே நேரத்தில் மூன்று பேருடன் உல்லாசம்.. ரத்தம் வந்தும் விடல.. விசாரணையில் வெளியான வினோதம்.. பகீர் உண்மை..!

பட்கல் தாலூக்கா, முருடேஸ்வர்: கைகினி சப்பட்டி கிராஸ் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 8 மணியளவில் இரு குழந்தைகளின் தாயான இளம்பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் முருடேஸ்வர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது.கொலை செய்யப்பட்ட பெண் மங்களூரைச் சேர்ந்த நந்தினி லோகேஷ் நாயக் (வயது 30) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்புமுருடேஸ்வரைச் சேர்ந்த லோகேஷ் நாயக்குடன் திருமணமான நந்தினி, திருமணத்துக்குப் பிறகுமுருடேஸ்வர்நடவர்கேரியில் கணவருடன் வசித்து வந்தார்.

இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.கடந்த மூன்று நாட்களாகவே இந்தத் தம்பதியினர் தங்கள் இரு குழந்தைகளுடன் சப்பட்டி கிராஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தனர். குடும்பத் தகராறு காரணமாக கணவர் லோகேஷ், மனைவி நந்தினியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.

வீட்டுக்கு வெளியே ரத்த வெள்ளத்தில் உயிரற்ற நிலையில் நந்தினியின் உடல் கிடப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தமுருடேஸ்வர்காவல் ஆய்வாளர் சந்தோஷ் கைகினி, உதவி ஆய்வாளர் மஞ்சுநாத் உள்ளிட்ட காவலர்கள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.பின்னர், ஒரு ஹோட்டலுக்கு தப்பியோடிய லோகேஷை காவல்துறையினர் கைது செய்தனர்.

சம்பவ செய்தி பரவியதும் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் சம்பவ இடத்துக்கு திரண்டனர். துக்கத்தில் ஆழ்ந்த குழந்தைகளும் உறவினர்களும் கண்ணீர் மல்க காட்சி அளித்தது.சம்பவ செய்தி அறிந்த உத்தர கன்னட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்ணு வர்தன் (கார்வார்) மற்றும் பட்கல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீகாந்த் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நிலைமையை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

முருடேஸ்வர்காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பின்னணி: கோயிலில் தொடங்கிய காதல் முதல் சோக முடிவு

விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி, நந்தினி மற்றும் லோகேஷின் காதல் ஒரு கோயிலில் தொடங்கியது. லோகேஷ் சிலை செதுக்கும் கலைஞர். கோயிலுக்கு வந்த நந்தினி, அங்கு சிலை செதுக்கும் லோகேஷைப் பார்த்து பழக ஆரம்பித்தார்.

நட்பு காதலாக மாறியது. தைரியமாக நந்தினியின் வீட்டுக்கு சென்ற லோகேஷ், "ஆடம்பர வாழ்க்கை தர முடியாது, ஆனால் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழ வைப்பேன்" என உறுதியளித்து திருமணம் செய்து கொண்டார்.

கிராண்டாக நடந்த திருமணத்துக்குப் பிறகு 12 ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்ந்த இவர்களுக்கு இரு குழந்தைகளும் பிறந்தன.

ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் நந்தினியின் நடத்தையில் பல மாற்றங்கள் ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவழித்து, பலருடன் தொடர்பு கொண்டதாகவும், இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும் புகார்கள் எழுந்தன.

சமூக வலைதளங்களில் தன்னுடன் பழகும் ஆண்களுடன் தனிமையில் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். அப்படித்தான், அருண் என்ற ஒரு நபருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

அருண், லோகேஷ் வீட்டில் இல்லாத நேரங்களில் வீட்டிற்கே வந்து நந்தினியை அழைத்துக்கொண்டு சென்று உல்லாசமாக இருந்து விட்டு, பிறகு வீட்டிற்கு வந்து இறக்கி விடுவது என இருந்திருக்கிறான்.

ருசி கண்ட பூனை, அடுப்பங்கரை ஏறும் என்பது போல, அருண் மட்டுமில்லாமல் இன்னும் சில சமூக வலைதள நண்பர்களுடன் வெளியே சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார். ஒரே நேரத்தில் மூன்று பேருடன் ஒன்றாக இருப்பது வரை நந்தினியின் தகிடு தத்தங்கள் நீண்டுள்ளன.

ஒரே நேரத்தில் உல்லாசமாகவும் இருக்கலாம், பணமும் கிடைக்கிறது என்பதால் ஒரு கட்டத்தில் விலை மாது போல நடந்து கொள்ள தொடங்கியுள்ளார் நந்தினி.

இதனால் ஏற்பட்ட தகராறுகள் உச்சத்தை அடைந்த நிலையில், சமீபத்தில் தனி வீடு எடுத்து வசித்து வந்தனர். இந்த நிலையில், மீண்டும் நந்தினி அடுப்பங்கரை ஏற ஆரம்பித்ததை கண்டறிந்த லோகேஷ் இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்ற திட்டமிட்டார்.

இந்நிலையில், ஆண் நண்பருடன் வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய நந்தினியை சாலையிலேயே வைத்து தீர்த்து கட்டினார். ரத்தம் வந்தும் விடாமல், நந்தினி இறக்கும் வரை காத்திருந்து, அதன் பிறகு இரண்டு குழந்தைகளையும் அழைத்து கொண்டு தன்னுடைய தாயிடம் ஒப்படைத்து விட்டு, போலீசாரிடம் சரணடைந்தார்..

காவல்துறை விசாரணையில் லோகேஷ் இது தொடர்பான விவரங்களை ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. வழக்கு விசாரணை தொடர்கிறது.

Summary in English : In Murdeshwar, Karnataka, 30-year-old Nandini Lokesh Naik, mother of two, was did by her husband Lokesh Naik over alleged infidelity and family disputes.