செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 20, 2026 அன்று நடைபெற உள்ளது. இந்த வழக்கில் நடிகர் விஜய் நேரில் ஆஜராவாரா அல்லது தனது வழக்கறிஞர் மூலம் பதில் அளிப்பாரா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் இல்லை.
இந்நிலையில், சங்கீதா தரப்பில் இருந்து சில முக்கிய தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. சங்கீதா மீது தேவையற்ற, உண்மைக்குப் புறம்பான தகவல்களை சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பரப்பினால், ஏப்ரல் 20ஆம் தேதி நீதிமன்ற விசாரணை முடிந்த உடன் ஊடகங்களை சந்தித்து பதில் அளிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான வாய்ப்பை நடிகர் விஜய் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்றும் சங்கீதா தரப்பு வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை நடிகர் விஜய்க்கு கடைசி எச்சரிக்கையாக பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், அதிகபட்சம் கூடுமானவரை நடிகர் விஜய் இந்த வழக்கில் நேரில் ஆஜராவதை தவிர்த்துவிடுவார் என்றும், தனது வழக்கறிஞர் மூலமாகவே வழக்கை எதிர்கொள்வார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
காரணம், ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் வழக்கில் நேரடியாக பங்கேற்று எந்தப் பதிலை அளித்தாலும் அது அவருக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.
ஒருவேளை சங்கீதா தரப்பு கூறுவது உண்மையென்றால், “நான் விவாகரத்துக்கு சம்மதிக்கிறேன்” என்று விஜய் கூறினாலும் அல்லது சங்கீதா மீது பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கினாலும், சங்கீதா உடனடியாக விஜய் குறித்தும் அவர் செய்ததாகக் கூறப்படும் விஷயங்கள் குறித்தும் ஊடகங்களில் பேட்டி அளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. இது விஜய்க்கு பெரும் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பிரச்சினையை நடிகர் விஜய் எப்படி கையாளப் போகிறார் என்பதை இன்னும் ஒரு வாரத்தில் பார்த்துவிடலாம்.
தற்போது இரு தரப்பிலும் பரபரப்பான தகவல்கள் பரவி வரும் நிலையில், நீதிமன்ற விசாரணையின் முடிவு மட்டுமல்லாமல், அதன் பிறகான ஊடக விவாதங்களும் பெரும் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Summary : Actor Vijay's divorce case filed by his wife Sangeetha is scheduled for hearing on April 20 in the family court. It is unclear if he will appear in person or through his lawyer. Sangeetha has indicated she may address the media after the hearing if needed. The matter is expected to be handled carefully due to the upcoming election on April 23.\

