ஏற்காடு அருகே காமம் தலைக்கேறிய பெண் செய்த காரியத்தை பாருங்க!

தேனி மாவட்டம் முத்தலாபுரத்தைச் சேர்ந்த சுபலட்சுமி (33). திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளவர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று குடும்பத்திலிருந்து பிரிந்து வந்தார். பின்னர் கத்தார் நாட்டிலுள்ள ஒரு கணினி நிறுவனத்தில் வேலை கிடைத்ததும் அங்கு சென்று பணியாற்றினார்.

இரண்டாவது திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மேட்ரிமோனி இணையதளத்தில் தனது புகைப்படம் மற்றும் செல்போன் விவரங்களுடன் பதிவு செய்தார். 

அதே தளத்தில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பரவக்கோட்டையைச் சேர்ந்த நடராஜ் (32) என்பவரும் பதிவு செய்திருந்தார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மனைவியை விட்டுப் பிரியாமலேயே மணமகள் தேவை என்று பதிவு செய்திருந்தார்.

இருவரும் தமிழர்கள். கத்தாரில் இருந்ததால் நேரில் சந்தித்துப் பழக்கம் ஏற்பட்டது. தினசரி தொலைபேசி உரையாடல்கள் மூலம் நட்பு வளர்ந்தது. பிறகு அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறியது. 

நடராஜ் தனது மனைவி, குழந்தைகள் இந்தியாவில் இருப்பதால் தனியாக இருந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சுபலட்சுமியுடன் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக நேரம் செலவிட்டார்.

ஒரு கட்டத்தில் நடராஜ், சுபலட்சுமியுடன் குடும்பம் நடத்த விரும்பினார். இருவரும் இந்தியா திரும்பியதும் வெளிநாட்டுக்கு மீண்டும் செல்ல வேண்டாம்; இந்தியாவிலேயே வேலை பார்த்துக் கொள்ளலாம் என்றும், குடும்பத்தாரிடம் “வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டோம்” என்று பொய் சொல்லி சமாளிக்கலாம் என்றும் முடிவு செய்தனர்.

அதன்படி கத்தாரிலிருந்து இந்தியா திரும்பினர். சில நாட்கள் அவரவர் வீட்டில் தங்கிவிட்டு மீண்டும் வெளிநாட்டுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு கிளம்பினர். ஆனால் வெளிநாட்டுக்குச் செல்லாமல் கோவை பீலமேட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கணவன்-மனைவி என்று சொல்லி அங்கு குடும்பம் நடத்தத் தொடங்கினர்.

ஒருநாள் தனிமையில் சுபலட்சுமி, நடராஜின் நெஞ்சில் அவரது மனைவியின் பெயர் பச்சை குத்தப்பட்டிருப்பதைக் கண்டு, “உன் மனைவி பெயர் மட்டும்தானா? என் பெயரை ஏன் குத்தவில்லை?” என்று கேட்டார். அடுத்த நாளே நடராஜ் சுபலட்சுமியின் பெயரை தனது கையில் டாட்டூவாக குத்திக்காட்டினார். இதனால் இருவருக்கும் இடையே நெருக்கம் மேலும் அதிகரித்தது.

பின்னர் நடராஜின் மனைவி அழைத்து, “அடிக்கடி வருவீர்கள். இப்போது வரவில்லை. வீட்டுக்கு வந்து பாருங்கள்” என்று கூறினார். நடராஜ் வேலை அழுத்தம் காரணமாக விடுப்பு கிடைக்கவில்லை என்று சமாளித்துவிட்டு, சுபலட்சுமியிடம் இரண்டு-மூன்று நாட்கள் ஊருக்குச் செல்வதாகத் தெரிவித்தார். அவரும் ஒப்புக்கொண்டார்.

ஊருக்குச் செல்வதற்கு முன் கையில் உள்ள டாட்டூவை அழித்துவிட்டார். மனைவி, குழந்தைகளைச் சந்தித்து சில நாட்கள் தங்கிய பிறகு மீண்டும் “வெளிநாட்டுக்குச் செல்கிறேன்” என்று பொய் சொல்லி கோவை திரும்பினார்.

அன்று இரவு மது அருந்திய நிலையில் வீட்டுக்கு வந்த நடராஜ், கையில் இருந்த டாட்டூ அழிக்கப்பட்டிருப்பதை சுபலட்சுமி கண்டார். கடும் கோபத்துடன் “ஏன் என் பெயரை அழித்தீர்கள்?” என்று கேட்டு வாக்குவாதம் ஏற்பட்டது. மது போதையில் இருந்த நடராஜ் கோபத்தில் சுபலட்சுமியின் தலையைப் பிடித்து அடித்தார். வீட்டிலிருந்த பொருட்களை எடுத்துத் தாக்கினார். தாக்குதலில் நிலைகுலைந்த சுபலட்சுமி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

பதறிய நடராஜ், பரவக்கோட்டையைச் சேர்ந்த தனது உறவினர் கனிவளவனை அழைத்து உதவி கேட்டார். இருவரும் சேர்ந்து சடலத்தை மறைக்க முடிவு செய்தனர். கோவையில் பல கடைகளில் பெரிய சூட்கேஸ் தேடினார்கள். இறுதியில் லூலு மாலில் உள்ள ஒரு கடையில் பெரிய ட்ராலி சூட்கேஸ் வாங்கினர். அதில் சுபலட்சுமியின் உடலை அடைத்து, வாடகைக் காரில் ஏற்றினர்.

முதலில் திருப்பத்தூர் ஏலகிரி மலைப்பகுதியில் வீசத் திட்டமிட்டனர். பின்னர் கள்ளக்குறிச்சி சேர்வாராயன் மலை வழியாக ஏற்காடு மலையைத் தேர்ந்தெடுத்தனர். இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத 40 அடி பாலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் சூட்கேஸைத் தூக்கி வீசிவிட்டு குப்பனூர் வழியாகத் தப்பிச் சென்றனர்.

மறுநாள் முதல் நடராஜ் செய்திகளைக் கவனித்துக்கொண்டிருந்தார். எந்தத் தகவலும் வராத நிலையில் வெளிநாட்டுக்குச் செல்ல ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்.

இதற்கிடையே சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 40 அடி பாலம் அருகே கடும் துர்நாற்றம் வீசுவதாக வனத்துறைக்குத் தகவல் வந்தது. வனக்காவலர் பெருமாள் அங்கு சென்று பார்த்தபோது 20 அடி பள்ளத்தில் சூட்கேஸ் இருப்பதும் அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதும் தெரியவந்தது. உடனடியாக ஏற்காடு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆய்வாளர் செந்தில் ராஜ்மோகன் தலைமையிலான காவலர்கள் நிகழ்விடத்திற்குச் சென்று சூட்கேஸைக் கைப்பற்றினர். உள்ளே அழுகிய நிலையில் சுபலட்சுமியின் உடல் இருந்தது. சுடிதார் அணிந்திருந்தார். தடய நிபுணர்களை அழைத்து ஆய்வு செய்தனர். சடலத்தை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டது.

சூட்கேஸில் இருந்த கடை ஸ்டிக்கர் மூலம் கோவை லூலு மாலில் உள்ள டிராவல் பொருட்கள் கடையில் இருந்து வாங்கப்பட்டது தெரியவந்தது. விசாரணையில் பரவக்கோட்டையைச் சேர்ந்த நடராஜ் அதை வாங்கியது உறுதியானது. அவரை அதிரடியாகக் கைது செய்து விசாரித்தபோது அனைத்து விவரங்களையும் வாக்குமூலமாக அளித்தார். உதவி செய்த கனிவளவனும் கைது செய்யப்பட்டார்.

இருவரையும் ஏற்காடு குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின்படி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்காடு பகுதியில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விசாரணை தொடர்கிறது.

Summary in English : A 33-year-old woman from Theni, after divorce and a job in Qatar, connected with a married man from Thiruvarur via a matrimony site. Their relationship led them to share a rented house in Coimbatore. Following a dispute over a tattoo, an incident caused her demise. The remains were placed in a suitcase and left near Yercaud hills. Both the man and his associate were later taken into custody.
------Advertisement------
------Advertisement------