“குழந்தைக்கு அம்மா ஆயிட்டு.. உனக்கு **** தேவையா..?” மோசமான கேள்விக்கு எருமசாணி ஹரிஜா பதிலடி..!

Youtube பிரபலம் எரும சாணி ஹரிஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் வெளியிடக்கூடிய வீடியோக்களுக்கு மோசமான கருத்து தெரிவிக்க கூடிய நபர்களுக்கு பதில் கொடுத்து இருக்கிறார்.

தன்னுடைய காதலர் அமர் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயுமாகி இருக்கிறார். குழந்தை பிறந்த பிறகு இவருடைய கவர்ச்சி என்பது அதிகமாக இருக்கிறது.

அதாவது இணைய பக்கங்களில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும், புதிய பாடல்கள்.. ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்கள்.. என அனைத்திற்கும் குத்தாட்டம் போட்டு இணையத்தை அதிரவைக்கிறார்.

இப்படி இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் வீடியோக்களை பார்க்கும் வரை இந்த ஆட்டம் உனக்கு தேவையா..? ஒரு குழந்தைக்கு அம்மாவாக பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டாமா..? என்பதில் ஆரம்பித்து அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு கடுமையான விமர்சனங்களை கருத்துக்களாக பதிவு செய்து வருகின்றனர்.

--Advertisement--

இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஹரிஜா-விடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் குழந்தை பிறந்து விட்டால் நடனம் ஆட கூடாதா.? நடனம் என்பது ஒரு கலை.

கலை எந்த ஒரு வடிவமாக இருந்தாலும் அதனை ரசிக்க வேண்டும். குழந்தை பிறந்து விட்டால் இந்த கலையை செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடு ஆதி காலத்தில் கூட கிடையாது.

தற்போது 2023-ல் மக்கள் இருக்கிறார்கள். பொதுவாக போலியான கணக்குகளில் இருந்து கருத்து தெரிவிக்கும் ஆண்களைப் பற்றி எனக்கு கவலை கிடையாது.

ஆனால், நிஜமாகவே பெண்கள் சிலரும் என்னை மோசமாக திட்டுகிறார்கள்.. ஒரு குழந்தைக்கு அம்மா ஆயிட்டு… உனக்கு இந்த ஆட்டம் தேவையா..? என்று கருத்துக்களை பதிவு செய்கிறார்கள்.

அவர்களை பார்த்து எனக்கு பயம் கிடையாது.. அவர்கள் கூறக்கூடிய கருத்தை பார்த்து எனக்கு பயம் கிடையாது.. ஆனால் அவர்களை சுற்றியுள்ள பெண்களை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள்.

அவர்களுக்கு ஒரு வேலை மகளோ அல்லது தோழியோ இருந்தால் அவர்களிடம் இவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்.. என்றெல்லாம் நினைக்கும் போது எனக்கு பயமாக இருக்கிறது. கலையை கலையாக பார்க்காமல் அந்த கலையை செய்பவருக்கு திருமணம் ஆகி விட்டதா..? குழந்தை பிறந்து விட்டதா..? என்று பார்த்துக்கொண்டிருப்பது எல்லாம் என்னவகையான மனநிலை என புரியவில்லை என்று தன்னுடைய வேதனையை பதிவு செய்துள்ளார் எருமசாணி ஹரிஜா.