Entertainment News
நடிகர் விக்ராந்த்-தின் அம்மா யாரு தெரியுமா..? – அட இவங்களா..ன்னு ஷாக் ஆகிடுவீங்க..!
தமிழ் திரைவுலகில் முன்னணி நாயகர்களின் வரிசையில் இருப்பவர் தளபதி விஜய். இவருக்கு உறவினராக அதாவது சித்தி மகனாக இருப்பவர் தான் நடிகர் விக்ராந்த்.
பார்ப்பதற்கு நடிகர் விஜய் போலவே காட்சி அளிக்கும் இவரது பாடி லாங்குவேஜும் நடிப்பில் ஏறக்குறைய விஜய்யைப் போலவே இருந்ததால் தொடர்ந்து படங்களில் இவர் ஜொலிக்க முடியாமல் போனது என்று பலரும் கருத்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் இவர் கற்க கசடற எனும் படத்தின் மூலம் தான் முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்தில் பெரிய வரவேற்பு கிடைக்காத நிலையில் இவர் முத்துக்கு முத்தாக என்று நடித்த திரைப்படம் பெரும் வெற்றியை இவருக்கு பெற்று தந்தது.
இதனை அடுத்து ரசிகர்கள் வட்டாரம் இவருக்கும் பெருகியது. மேலும் பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது .அந்த வரிசையில் கவண், தொண்டன், பக்ரீத் போன்ற படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கும் நிலையில் இவரது மனைவி ஒரு சின்னத்திரை நடிகை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் விக்கிராமின் தாயார் ஒரு நடிகை என்பது பலருக்கும் தெரிந்திருக்க கூடிய விஷயம் அல்ல.
ஆனால் நடிகர் விக்கராந்தின் தாயான ஷீலாவும் ஒரு நடிகை இவர் சின்ன திரையில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர், பாக்கியலட்சுமி சீரியல்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது எந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்கு உண்மை என்ன என்பது புரிய வரும் இப்போது உங்களுக்கு தெரிந்து விட்டதா… நான் கூறியது உண்மை என இந்த நடிகை தான் நடிகர் விக்ராந்தின் அன்புத் தாயார்.
இதனைத் தெரிந்து கொண்ட ரசிகர்கள் தற்போது மிகுந்த குஷியில் இருக்கிறார்கள் என்று கூறலாம். விக்ராந்தின் குடும்பம் முழுவதுமே கலை துறையில் இருப்பதால் வருங்காலத்தில் அவரது குழந்தைகளும் கலைத்துறையில் ஜொலிப்பார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை என்று அவரது ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள்.
அரசியலில் எப்படி வாரிசு அரசியலோ அதுபோல் திரையுலகிலும் வாரிசுகளின் ஆதிக்கம் தற்போது அதிகரிக்க அதிகரித்து இருக்கக்கூடிய சூழ்நிலையில் ரசிகர்களின் வாக்கு உண்மையாகும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.