Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

‘சூப்பர் 77’ தி கிரேட் ஏ.வி.எம் புரொடக்க்ஷன்

AVM

Tamil Cinema News | சினிமா செய்திகள்

‘சூப்பர் 77’ தி கிரேட் ஏ.வி.எம் புரொடக்க்ஷன்

AVM

எம்ஜிஆர், சிவாஜி கணேசன் காலத்திலிருந்து நான்கு தலைமுறைகளாக திரைப்படங்கள் தயாரித்து வரும் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனம் தான் ஏ.வி.மெயப்ப செட்டியாரால் நிறுவப்பட்ட  இந்திய திரைப்பட தயாரிப்பு ஸ்டுடியோ.இது 1945 ல் சென்னையில் உள்ள வடபழனி பகுதியில் நிறுவப்பட்டது.

இதன் உரிமையாளரான ஏ.வி.மெய்யப்பன் தனது 16 வயதில் கிராமபோன் பதிவுகளை தயாரிக்க முடிவு செய்து சென்னைக்கு போனார். அங்கு அவரின் நண்பர்கள் கே.எஸ்.நாராயண ஐயங்கார், சுப்பையா செட்டியார்,கே.பி. வரதாச்சாரி,கோவிந்தாச்சாரி ராகவாச்சாரி ஆகியோரோடு இணைந்து பல பதிவுகளைத் தயாரித்தார்.

இதனை அடுத்து1931 ல் டாக்கி சகாப்தத்தின் விடியல் சரஸ்வதி சவுண்ட் புரொடக்ஷன்ஸைத் தொடங்க மெய்யப்பனை ஊக்கப்படுத்தியது. இது அவரின் முதல் திரைப்பட முயற்சியான “அல்லி அர்ஜுனா” என்ற ஒரு இந்து புராணத்தை மையமாக கொண்ட திரைப்படத்தைத் எடுக்க தொடங்கி ரத்னாவலி என்ற பெயரில் வெளியிட அது மொத்தமாக தோல்வியை தந்தது.

எனவே அமெச்சூர் நடிகரும் கல்லூரி பட்டதாரியுமான ஏ.டி.கிருஷ்ணசாமியிடம் உதவி இயக்குநராக பல ஆண்டுகளாக பணி புரிந்த போது ஆரம்ப ஏ.வி.எம் தயாரிப்புகளை ஏ.டி.கே எழுதி இயக்கியுள்ளார். அதன் பின் 1940 ஆம் ஆண்டில், பூ கைலாஸ் என்ற தெலுங்கு புராண திரைப்படத்தை தயாரித்து மிகப்பெரிய வரலாற்று வெற்றியை அடைந்தார். பின்னர் காரைக்குடியில் காரிகுடி பகுதியில் பெரிய திறந்தவெளியில்  ஸ்டுடியோவை அமைத்தார். இது தான் ஏ.வி.எம் ஸ்டுடியோஸுடன் ஏ.வி.எம் புரொடக்ஷன்ஸ் பிறந்த கதை.

அதன் பின் இந்த கம்பெனி மூலம் ஹிட் படமான  “நாம் இருவர்” 1947 , “அந்த நாள்” 1954, மற்றும் தேசிய விருது பெற்ற ஹிந்தி படமான “ஹம் பஞ்சி ஏக் டால் கே” 1957 தொடர்ந்து வெற்றிகளை அள்ளி குவிக்க மெயப்பன் ஆகஸ்ட் 12, 1979 அன்று இறந்தார்.

AV MAIYAPPACHITIYAR

அவரது மறைவுக்குப் பிறகு அவரது மகன்கள் அப்பா விட்டு சென்ற இடத்தை நிரப்ப களத்தில் குதித்தனர். 1980 ல் முதல் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை  “முரட்டு காளை” படத்தில் திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியதோடு படத்தையும் மெகா ஹிட் டாக்கினார்கள்.

1982 ல் கமல்ஹாசனை கொண்டு எடுத்த “சகலகலா வல்லவன்”,1983 கே.பாக்கியராஜ் இயக்கிய “முந்தானை முடிச்சு”,1984 ல் விஜயகாந்த் நடித்த “வெள்ளை புறா ஓன்று”, 1986 விசுவின் “சம்சாரம் அது மின்சாரம்” என ஆண்டுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அவ்வளவு வெற்றி படைப்புகள்.

2002 ல் உலகையே  “ஓ” போடு பாடல் மூலம் பரவசத்தில் ஆழ்த்திய “ஜெமினி” திரைப்படம். 2006 தல அஜித்தின் “திருப்பதி” படம், 2009 ல் சூர்யாவின் “அயன்” என பட்டியல் போட்டு கொண்டே போகலாம். 2014 ல் முதல் முயற்சியாக வெளி வந்த 55 நிமிட திரைப்படமான “இதுவும் கடந்து போகும்” இவர்களின் புதிய முயற்சிகளுக்கான உதாரணம்.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 300க்கும் அதிகமான திரைப்படங்களை தயாரித்துள்ளது.

AVM

பெரிய திரையோடு நிற்காமல் காலத்தின் ஏற்ப சின்ன திரையிலும் கால் பதித்து கல்லா கட்டும் விதத்தில் எல்லா வித நவீன தொழில் நுட்பத்தையும் தன்னகத்தே கொண்டு 76 ஆண்டுகளுக்கும் மேல் இத்துறையில் இருக்கும் இந்த நிறுவனம் தனது ஓடிடி பயணத்தை விரைவில் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

மேலும் சினிமா உலகத்தையே தன் சூழலும் உலக லோகோவில் அடக்கி ஆள்கிறது. இதற்கு இவர்களின் தன் அடக்கம், தெய்வ பக்தி, பக்க பலமாக மேன்மேலும் உச்சத்தை அடைவார்கள் என்பதில் ஐயமில்லை.

.

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top