“கோடையில் சோப்பு வேண்டாம்..!” – A to Z சரும பிரச்சனை போக குளியல் பொடி போதும்..!

கோடையில் ஏற்படும் சரும உபாதைகளில் இருந்து நம்மை பாதுகாக்க பல வித விதமான சோப்புகளையும் டால்கம் பவுடர்களையும் பயன்படுத்துவோம்.

 இனி நீங்கள் அப்படி செய்யாமல் உங்கள் சருமத்தை மேம்படுத்தி தரக்கூடிய பாரம்பரிய குளியல் பொடியை உங்கள் வீட்டிலேயே தயார் செய்து குளிப்பதின் மூலம் கோடையில் ஏற்படுகின்ற வியர்குருவில் இருந்து மட்டுமல்லாமல் எண்ணற்ற உபாதைகளில் இருந்து நீங்கள் விடுபட முடியும்.

 அப்படிப்பட்ட பாரம்பரிய குளியல் பொடி எப்படி செய்வது என்று இப்போது இந்த கட்டுரையின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

 குளியல் பொடி செய்ய தேவையானவை

 1.காய்ந்த பன்னீர் ரோஜா இதழ்கள் 100 கிராம்

2.பாசி பயிறு அரை கிலோ

--Advertisement--

3.வெட்டிவேர் 100கி

4.மகிழம்பூ 50 கி

5.கஸ்தூரி மஞ்சள் 50 கி

6.கோரைக்கிழங்கு 50 கி

7.எலுமிச்சை பழத்தோல் 100கி

8.ஆரஞ்சு பழத்தோல் 100கி

9.குப்பைமேனி இலை 50 கி

10.ஆரஞ்சு பழத்தோல் 100 கி

 மேற்குறிய பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். அந்த பொருட்களை நீங்கள் வாங்கி வந்து லேசாக இளம் வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

 இரண்டு நாட்கள் இந்த பொருட்கள் காய்ந்த பிறகு நீங்கள் இதை அனைத்தையும் மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் மிக்ஸியில் போட்டு அரைக்க முடியாது என்பதால் மாவரைக்கும் மில்லில் சென்று அரைக்கலாம்.

 அப்படி அரைக்கும் போது அவர்கள் மிளகாய் தூள் போட்டு அரைத்த எந்திரத்தில் போட்டு அரைக்காமல் தனியாக இருக்கக்கூடிய எந்திரத்தில் போட்டு அரைத்து வாங்கிக் கொள்ளுங்கள். அப்படி அரைத்து வந்த அந்த பொடியை லேசாக ஒரு பேப்பர் அல்லது சேலையில் விரித்து காய விடுங்கள்.

 சூடு குறைந்த பிறகு இதனை ஒரு டப்பாவில் டைட்டாக மூடிக் கொள்ளவும். குளிக்கும்போது எந்த பொடியை உங்கள் உடல் முழுவதும் பூசி குளிக்கலாம். மேலும் விடுமுறை நாட்களில் இந்த பொடியை சிறிதளவு எடுத்து இளநீர்,பன்னீர், பால், தயிர் போன்றவற்றில் ஃபேஸ் பேக்காக மாற்றி உங்கள் முகத்தில் தேய்த்து மேனி அழகை மெருகேற்றிக் கொள்ளலாம்.

 இந்த பொடியை பயன்படுத்தி குளிக்கும்போது நீங்கள் வைத்திருக்கும் சோப்புகளை பயன்படுத்தக் கூடாது. இந்த பொடியை உங்கள் குழந்தைகளுக்கு பயன்படுத்தி குளிக்கவை மூலம் சரும ஆரோக்கியம் மேலோங்கும்.

 நீங்களும் உங்கள் வீட்டில் இந்த பொடியை பொடித்து வருகின்ற சம்மர் சமயத்தில் சோப்புகள் பயன்படுத்தாமல் இதை பயன்படுத்திக் பார்த்து நன்மைகள் என்னென்ன பெற்றீர்கள் என்பதை பகிரலாமே.