“ஒத்த மீம்.. மொத்த நடிகர் சங்கத்தை அலறவிட்ட ப்ளூ சட்டை மாறன்..” குவியுது லைக்ஸ்..!

ப்ளூ சட்டை மாறன் என்றால் சும்மாவா? என்று கேட்கக் கூடிய வகையில் தற்போது ஒரு ஒத்த மீம் போட்டு மொத்த நடிகர் சங்கத்தையும் அலற விட்டிருக்கக் கூடிய செயலை எண்ணி அனைவரும் மனதுக்குள் சிரித்து வருகிறார்கள்.

கலிகாலத்தில் இருக்கும் நாம் கடையேழு வள்ளல்களை பார்த்ததில்லை. ஆனால் திரையுலகில் தான் சம்பாதித்தவற்றில் பெரும் பகுதியை அன்னதானம் செய்து, மக்களுக்காக பல பணிகளை செய்து இன்று விண்ணுலகம் சென்ற கேப்டன் விஜயகாந்த் பற்றி பல தகவல்களை நீங்கள் தெரிந்திருப்பீர்கள்.

அந்த வகையில் பலருக்கும் உதவி செய்த விஜயகாந்தின் இறுதி அஞ்சலிக்கு வராத பல நடிகர்கள் பற்றிய விஷயங்களை பகிர்ந்து இருந்த நாம் தற்போது சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பலரையும் கிண்டல் அடித்து தொடர்ந்து பதிவுகளை போட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் நடிகர் விஷாலின் வீடியோவை விமர்சித்து தனது எக்ஸ் தளத்தில் போட்டுள்ள மீம் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி விட்டது. இதனைப் பார்த்த பலரும் நாம் மனதில் என்ன நினைத்தோமோ அதை அப்படியே மனுஷன் வெளிப்படுத்தி விட்டார் என்று மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

கேப்டன் விஜயகாந்தின் உயிரிழப்பு தமிழகம் முழுவதுமே ஒரு மாபெரும் அதிர்வை ஏற்படுத்திய நிலையில் விஷால் அந்த சமயத்தில் அமெரிக்காவில் இருந்ததினால் விஜயகாந்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த வர முடியவில்லை என்பதை ஒரு வீடியோவில் விளக்கி இருந்தார்.

--Advertisement--

மேலும் அந்த வீடியோவில் அண்ணே என்னை மன்னித்து விடுங்கள் என்று கதறி அழும் வீடியோவை போட்டு விஜயகாந்த் மிகச்சிறந்த அரசியல் ஆளுமை மட்டுமல்லாமல் நடிகர் சங்கத்தை கட்டி காத்த நல்ல மனிதர் அவர் இறப்பை தன்னால் ஜீரணிக்கவே முடியவில்லை என்று கதறி அழுதிருந்தார்.

இந்த வீடியோவை ஒரு பக்கம் ரோல் செய்து இருந்தாலும் இந்தியா திரும்பி வந்த விஷால் கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் எப்படி அஞ்சலி செலுத்துவார் என்பதை எதிர்பார்த்து தமிழகமே காத்திருந்தது.

அதனை மனதில் வைத்துக் கொண்ட ப்ளூ சட்டை மாறன் எம்டன் மகன் படத்தில் வடிவேலு தன் அப்பா இறந்த போது சுடுகாட்டுக்கு வந்து வேறொருவர் சமாதியில் அழும் புகைப்படத்தை தான் தற்போது பதிவிட்டு இருக்கிறார்.

இதனை அடுத்து ஒரே ஒரு மீமை போட்டு மக்கள் மனதில் இருக்கும் விஷயத்தை எளிமையாக வெளிப்படுத்திய ப்ளூ சட்டை மாறனை பாராட்டி வருவதோடு நடிகர் சங்கத்தையே திணறடித்து விட்டார் என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.