“வீட்டிலேயே காஞ்சிபுர இட்லியா?” – நீங்களும் அசத்த இத ஃபாலோ பண்ணுங்க..!

 இட்லி அரைக்கும் போது பலவிதமான டெக்னிக்கை ஃபாலோ செய்து பொது பொதுவென்று குஷ்பு இட்லியையும், மல்லி பூ போல இட்லி செய்யும்  நாம் காஞ்சிபுர இட்லி சுவையை இதுவரை இட்லியை வீட்டில் செய்து இருக்க மாட்டோம்.

 அட அந்த காஞ்சிபுரம் இட்லிக்கு என்ன அப்படி அவ்வளவு மவுசு என்று நீங்கள் நினைக்கலாம். ஒருமுறை காஞ்சிபுரம் நீங்கள் செல்லும்போது அந்த இட்லியை சுவைத்து விட்டால் அதுபோல இட்லியை தான் நீங்கள் உண்ண வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் மேலோங்கும்.

 எனவே அத்தகைய இட்லியை உங்கள் வீட்டில் இருந்தே எப்படி செய்யலாம் என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

காஞ்சிபுரம் இட்லி செய்ய தேவையான பொருட்கள்

1.புழுங்கல் அரிசி பச்சை அரிசி சம அளவு 1/2 ,1/2=1 kg

2.உளுத்தம் பருப்பு 300 கி

--Advertisement--

3.நல்லெண்ணெய் 25 மில்லி

4.சுக்குத்தூள் சிறிதளவு

தாழிக்க

6.உளுத்தம் பருப்பு

7.ஆப்ப சோடா

8.கடுகு

9.கடலைப்பருப்பு

10.மிளகு

11.சீரகம்

12.துருவிய தேங்காய் சிறிதளவு

13.கருவேப்பிலை

14.பெருங்காயம்

15.இஞ்சி

16.உப்பு

 செய்முறை

முதலில் எடுத்து வைத்திருக்கும் பச்சரிசி மற்றும் புழுங்கரிசியை சம அளவு போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை அடுத்து உளுத்தம் பருப்பையும் நீங்கள் நன்றாக அரைத்து உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.

 பிறகு  அரிசி அரைத்த அந்த பாத்திரத்தில் உளுந்து மாவை போட்டு ஒன்றாக கலந்து கொள்ளவும். மாவு புளிக்கும் வரை காத்திருக்கவும். மாவு புளித்தபின் அதனோடு சுக்குத்தூள் மற்றும் ஆப்ப சோடாவை சிறிதளவு கலந்து கொள்ளவும்.

நல்லெண்ணையை வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும் அவை சூடான பிறகு தாளிக்க வைத்திருக்கும் பொருட்களான கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை பொன் நிறமாக வறுத்துக் கொள்ளவும்.

 இதில் மிளகு, சீரகத்தை சேர்த்து வறுக்கவும்.  இந்த கலவையை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பிறகு இதனோடு இஞ்சி கருவேப்பிலையை சேர்க்கவும் அத்தோடு அரைத்து வைத்திருக்கும் அந்த பொடியையும் மாவில் நன்றாக போட்டு கலந்து விடவும்.

 இதனை அடுத்து நீங்கள் உங்கள் இட்லி தட்டில் இந்த மாவினை ஊற்றினால் சூடான சுவையான காஞ்சிபுரம் இட்லி தயார்.