மல்டிப்ளக்ஸ் தியேட்டர் கட்டும் நடிகர் விஜய்.. அதுவும் எந்த ஊர்ல தெரியுமா..? உங்கள் கருத்து என்ன..?

மல்டிப்ளக்ஸ் தியேட்டர் கட்டும் நடிகர் விஜய்.. அதுவும் எந்த ஊர்ல தெரியுமா..? உங்கள் கருத்து என்ன..?

நடிகர் விஜய் இப்போது வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. அடுத்து, விஜய் 69 என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு, சினிமாவை விட்டு விலக உள்ளார்.

கடந்த மாதம் 2ம் தேதி, தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கிய விஜய், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்றும், யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

ஆனால் 2026 சட்டசபை தேர்தல்தான் எங்கள் இலக்கு. மக்கள் நலன் மட்டுமே லட்சியமாக கொண்டு தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி நடத்தும் என்றும் கூறியிருக்கிறார்.

மல்ட்டி பிளக்ஸ் சினிமா தியேட்டர்

இந்நிலையில் நடிகர் விஜய், புதுச்சேரியில் மல்ட்டி பிளக்ஸ் சினிமா தியேட்டர் ஒன்றை கட்ட இருப்பதாகவும், அதற்காக அவர் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சமீபத்தில் நேரில் சந்தித்து பேசியதாகவும் தகவல் வைரலாக பரவி வருகிறது.

--Advertisement--

முக்கிய நகரங்களில் திருமண மண்டபங்கள்

ஏற்கனவே விஜய், தனது மனைவி சங்கீதா மற்றும் அம்மா ஷோபா பெயரில் சில முக்கிய நகரங்களில் திருமண மண்டபங்களை கட்டி வாடகைக்கு விட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சினிமா தியேட்டர் அவர் கட்டுவது பெரிய ஆச்சரியத்தை தமிழக மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: ஒரு பொண்ணுக்கு வரக்கூடாத பிரச்சனை..அவரு சொன்னதுக்காக.. நடிகை புவனேஸ்வரி வேதனை..!

ஏற்கனவே நீலாங்கரையில் விஜய் சொந்தமாக ஒரு பெரிய பள்ளிக்கூடம் கட்டி வருகிறார் என்ற தகவலும் இருக்கிறது.

அரண்மனை போன்று…

ஆனால் அது பள்ளிக்கூடம் அல்ல. மிகப்பெரிய அளவில் அரண்மனை போன்று கட்டப்படும் அவரது சொந்த வீடுதான் என்றும் பலரும் கூறி வருகின்றனர். ஆனால் இது உருட்டா, உண்மையா என்று இதுவரை தெரியவில்லை.

தமிழ்நாட்டில் சினிமா தியேட்டர் கட்டாமல், புதுச்சேரியில் விஜய் அதிக பொருட்செலவில் மல்ட்டிபிளக்ஸ் சினிமா தியேட்டர் கட்டுவது ஏன் என பலரும் சந்தேகம் கிளப்பி வருகின்றனர்.

தியேட்டர் பிஸினஸ்

ஒருவேளை சினிமாவில் நடிப்பை விட்டு விலகினாலும், தியேட்டர் பிஸினஸ் மூலம் மாதந்தோறும் பல லட்சங்களை பார்க்கலாம் என்று வருமானத்துக்கான ஒரு ஏற்பாடாக கூட இது இருக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் பேசத் துவங்கியுள்ளனர்.

இதையும் படியுங்கள்: “போதையில் மிருணாளினி ரவி..” ஏசு கிறிஸ்துவை இழுத்து சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஜய் ஆண்டனி..

சினிமா தியேட்டர் வருமானத்தை பொருத்தவரை, எப்போதுமே நஷ்டமே தராத தொழில்தான். தமிழ்நாட்டில், கேரளாவில் உள்ளதை போல புதுச்சேரியிலும் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை பெருக்கவும், எதிர்காலத்தில் அங்கும் தனது அரசியல் செல்வாக்கை நிலைநாட்டவும் கூட விஜய், இப்படி தியேட்டர் கட்டும் ஒரு முயற்சியை செய்திருக்கலாம் என்றும் தகவல் பரவி வருகிறது.

கருத்து என்ன

மல்டிப்ளக்ஸ் தியேட்டர் கட்டும் நடிகர் விஜய்.. அதுவும் புதுச்சசேரியில் கட்டுவதால், உங்களின் கருத்து என்ன என்றுதான் பலரும் இப்போது கேள்வி கேட்கத் துவங்கியிருக்கின்றனர்.

ஏனெனில் அரசியல்வாதி ஆகிவிட்ட நடிகர் விஜயின் ஒவ்வொரு செயலும் இனி மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படும். அது பற்றிய விமர்சனங்கள் இன்னும் வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தும்.