"என் மகனிடம் அதை சொல்லி விட்டேன்.." கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன நடிகை பூமிகா..!
நடிகை பூமிகா சமீபத்திய பேட்டி ஒன்றில் வாழ்க்கை குறித்த ஆழமான தத்துவத்தை பகிர்ந்துள்ளார். "இந்த வாழ்க்கையில் நமக்கு கிடைத்திருப்பது நமக்கு கொடுக்கப்பட்டது என்பதை நம்பக்கூடாது" என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். கடவுள் நமக்கு இன்று கொடுக்கும் விஷயத்தை நாளை திரும்பப் பெறக்கூடும் என்றும், அமைதியான வாழ்க்கை மோசமாக மாறவும் வாய்ப்புள்ளது என்றும் அவர் பேசியுள்ளார். நாம் செய்யும் செயல்களே நம் வாழ்க்கையின் அடிப்படையை தீர்மானிக்கும் என்றும் பூமிகா கூறியிருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பூமிகா. அழகான தோற்றத்தாலும், சிறந்த நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்த பூமிகா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வாழ்க்கை குறித்த தனது தத்துவங்களை பகிர்ந்துள்ளார். அவரது இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. "இந்த வாழ்க்கையில் நமக்கு கிடைத்திருப்பது நமக்கு கொடுக்கப்பட்டது என்பதை நம்பக்கூடாது என்று நான் சொல்லி விடுவேன். இன்று கடவுள் நமக்கு கொடுத்த ஒரு விஷயம், நாளை எடுத்துக்கொள்வார்....