Posts

Showing posts with the label B.Ed student

முறை தவறிய காதலியுடன் ஜெய்சங்கர் பட ஸ்கெட்ச்.. வழுக்கி விழுந்த மனைவி! “இந்த மாமனோட மனசு..”

Image
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே பெரும்பேடு கிராமத்தில் பி.எட். இரண்டாம் ஆண்டு பயின்று வந்த 20 வயது இளம்பெண் ஒருவரை கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரியபாளையம் அடுத்த பூரிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கௌசல்யா (20) என்பவருக்கும், பொன்னேரி பெரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த கொத்தனார் வேலை செய்யும் ராஜேஷ் (31) என்பவருக்கும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு உறவினர் முறையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகும் கௌசல்யா பொன்னேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட். படிப்பைத் தொடர்ந்து வந்தார். கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 7, 2026) மாலை ராஜேஷ் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, தனது மனைவி கௌசல்யா சமையலறையில் எண்ணெய் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்துவிட்டதாகக் கூறி, மாமனார் முருகனுக்கு தகவல் தெரிவித்தார்.  மேலும், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது டாக்டர்கள் உயிரிழந்துவிட்டதாகக் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கௌசல்யாவின் தந்தை முருகன், மகளின் தலையில் மட்டுமின்றி முகம் உள்ளிட்ட பகுதிகளிலும் காயங...