Posts

Showing posts with the label agricultural worker

போலீஸ் ஆக கனவு கண்ட இளம்பெண்! கருகிய உடல்! விசாரணையில் பகீர் டிவிஸ்ட்! 6 மாத மர்மம் விலகியது..!

Image
புதுக்கோட்டை : எம்.எஸ்.சி. பட்டதாரியான மனைவி மொபைல் போனில் அதிக நேரம் செலவழிப்பதால் சந்தேகம் ஏற்பட்டு, அவரைத் தாக்கிக் கொலை செய்து, உடலைத் தீவைத்து எரித்து, தற்கொலை நாடகம் ஆடிய கணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் புதுக்கோட்டை மாவட்டம், ரெகுநாதபுரம் அருகே உள்ள புது விடுதி பகுதியில் நடந்துள்ளது. முருகேசன் (33) என்பவர் அங்கு விவசாயக் கூலி வேலை பார்த்து வந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த எம்.எஸ்.சி. பட்டதாரியான ஆஷா (வயது 28) என்பவரை இரு தரப்பு சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த நவம்பர் 10-ம் தேதி ஆஷா வீட்டில் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். வேலையிலிருந்து வீடு திரும்பிய முருகேசன், மனைவியின் உடலைப் பார்த்து கதறியதாக முதலில் கூறப்பட்டது. ரெகுநாதபுரம் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வழக்குப் பதிவு செய்தனர். ஆலங்குடி டிஎஸ்பி மனோகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, இன்ஸ்பெக்டர் கோபால் விசாரணை நடத்தினார். ஆஷாவின் தாயார் (முருகேசனின் மாமியார்), மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி இரண்டு மா...