Posts

Showing posts with the label Kailasa Country

வெளியானது கைலாசா நாட்டின் கரன்ஸி - இதோ புகைப்படம்..!

Image
இந்தியாவில் தேடப்படும் குற்றவாளி பட்டியலில் உள்ள நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பது எந்த காவல் அமைப்புகளுக்கும் தெரியவில்லை. இதற்கிடையே நித்தியானந்தா தான் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அங்கு வாழ்ந்து வருவதாக அவரே வீடியோ வெளியிட்டார். இதுகுறித்து நடந்த ஆய்விலும் இந்திய அதிகாரிகள் குறிப்பிடும் வகையில் எதையும் கண்டறியவில்லை. ஓரு ஆண்டுக்கு மேலாக அதிகாரிகள் நித்தியானந்தாவைத் தேடி வரும் நிலையில், செய்திகளுக்குப் பேட்டி அளிப்பது, வீடியோக்கள் வெளியிடுவது, கைலாசா நாடு குறித்து அறிவிப்புகளை வெளியிடுவது உள்ளிட்டவற்றை அவர் வாடிக்கையாக கொண்டிருந்தார்.  இந்த சூழலில் இப்போது கைலாசாவின் கரண்சி தயார் எனக் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நமக்கு கிடைத்த தகவலின்படி, “விநாயகர் சதுர்த்து தினத்தன்று ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா, கைலா பணம் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்படும். வாடிகன் பேங்கை மையமாக வைத்து இந்த ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா செயல்படும்.  வெளிநாட்டு பரிவர்த்தனைக்கு எனத் தனியாக ஒரு பணமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 300 பக்கத்தில் நாட்டின் பொருளாதார கொள்கையும் த...